சமுதாய காதல்

சாதித்தே தோற்றாலும்
சாதித்தே வென்றாலும்
சாதிப் பார்க்கும் கூட்டமடா.... !

இனவெறிக்கு எதிராக
இங்கே கைகள் உயர்ந்ததடா
சாதிவெறிக்கு எதிராக - உன்
சரித்திர கைகள் உயர்த்தடா...!

விளையாடும் களமும்
போராட்ட களம்தான் - உன்
சாதனை குறியீடும்
சமுதாய விழிப்புணர்வுதானடா...!

உதாசீன கூட்டத்துக்கு - நீ
உதாரண கூட்டமடா -
உரசும்முன் நீ கல்தானடா -
உரசியபிறகு நீயொரு தீ தானடா....!

தோற்றலும் கற்றல்தான் -
கற்றலும் மாற்றம்தான் -
மாற்றமும் பேராற்றல்தான் -
பேராற்றலும் நம் வரலாறுதானடா !

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (7-Aug-21, 1:17 pm)
பார்வை : 38

மேலே