தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க கவிஞர் இரா இரவி

தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க!

கவிஞர் இரா. இரவி

அரியானாவில் உள்ள பானிபட்டில் பிறந்தவனே
இந்திய இராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிபவனே!

ஓட்டுமொத்த இந்தியாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவனே
ஒரே ஒரு அம்பின் மூலம் குடிமக்களின் அன்பைப் பெற்றவனே!

நூற்றாண்டுக் கனவை நொடியில் நனவாக்கியவனே
நூற்றாண்டு கடந்தும் உன் புகழ் நிலைக்கும்!

ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கிடைக்காதா ? என்று
ஒட்டுமொத்த இந்தியாவும் ஏங்கி தவித்தது - இன்று

தங்கத்தை வென்று சாதனைகள் பல நிகழ்த்தியவனே
தங்கமகன் என்றால் உனக்கே முற்றிலும் பொருந்தும்!

சாதி மதம் மொழி என பாகுபாட்டைத் தகர்த்தவனே
சகோதரனாக எல்லோரும் உன்னைப் பாராட்டுகின்றனர்!

உடல் எடை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்தவனே
ஓட்டத்தின் துணைகொண்டு ஈட்டியும் எறிந்தவனே!

நீ விட்ட அம்பு சென்ற வேகத்தைப் பார்த்தால்
நாங்கள் விட்ட ஏவுகணைகள் எல்லாம் தோற்றது உன்னிடம்!

பதக்கப்பட்டியல் வெண்கலத்தோடு முடிந்துவிடுமோ என
பதைபதைத்த நேரத்தில் ஈட்டியால் தங்கம் ஈட்டியவனே!

இந்த வேகம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
அந்த அம்பு பறந்தது மின்னல் வேகத்தில்

பதக்கப்பட்டியலில் பின் தங்கியிருந்த இந்தியாவை
பதக்கம் தங்கம் வென்று முன்னேற்றிக் காட்டியவனே!

அரியானா மட்டுமல்ல அகில இந்தியாவும் மகிழ்ந்தது
அனைவரின் நெஞ்சில் பால் வார்த்திட்ட வாலிபனே!

இனிவரும் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் உன்னால்
இந்தியா தங்கம் பெறுவதை உறுதியாக்கிய வல்லவனே!

விளையாட்டின் வரலாற்றில் உயர்ந்த இடம் பிடித்தவனே
விளையாட்டில் விளையாட்டாக வீசி தங்கம் வென்ற தங்கமகனே!
வாழ்க! வாழ்க!!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (9-Aug-21, 7:14 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 43

மேலே