ஓடுது ஓடுது
ஓடுது ..,ஓடுது
சிறுத்தை ஓடுது வேகமாய்,
ஆறு ஓடுது அமைதியாய்.
சிறுத்தை ஓடுது அழிப்பதற்கு,
ஆறு ஓடுது அளிப்பதற்கு
வேகத்தை* கட்டு வாழ்வில் உயர்வதற்கு,
அமைதியைக் காட்டு அன்பு வளர்வதற்கு.
* வேகம் = அவசரம்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.