துன்பம் கவலை சுமை குறைய கூட்டு நகைச்சுவையை

நகைச்சுவை என்பது ஒன்று நகைச்சுவை உணர்வு என்பது ஒன்று
நகைச்சுவையை கண்டு கேட்டு ரசிப்பவர் சிலர் , சிரிப்பவர் பலர்
சிரிப்பவருக்கெல்லாம் நகைச்சுவை உணர்வு என்பது கிடையாது
சிரிப்பில்லாதவருக்கு இந்த உணர்வு இல்லை என்றும் கிடையாது

நான் நகைச்சுவை சொல்லும்போது அதிகம் சிரிக்கமாட்டேன்
ஏனெனில் அப்போதுதான் மற்றவர்கள் அதிகமாக சிரிப்பார்கள்
நகைச்சுவையில் பல வகைகள் உண்டு அதில் நானும் ஒன்று
ஒரே நகைச்சுவையை அடிக்கடி கேட்பதில் சுவாரசியம் இல்லை
சினிமா நடிகர்கள் செய்வது மட்டுமே நகைச்சுவை என்பதில்லை

நான் சாதாரணமாக பேசும்போதும் நகைச்சுவை இருக்கும்
நகைச்சுவை உணர்வு அதிகரித்தால் சிரிப்பொலி இருக்கும்
நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் இருப்பின் வீடு அதிரும்
வீட்டுக்கு வந்து செல்பவர்கள் முகத்தில் புன்னகை உதிரும்

ஒருவர்: இந்த கரோனாவினால் ஊரெல்லாம் ஒரே திண்டாட்டம்
நான்: அதே வேளையில் வீட்டுக்குள்ளே சிலருக்கு கொண்டாட்டம்

ஒருவர்: நான் அறுபது வயது வரை கல்யாணம் செய்யவில்லை
நான் : போன மாசம் உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணீங்களே
ஒருவர்: நான் சொல்வது என் அறுபதாம் கல்யாணத்தை பற்றி

ஒருவர்: நான் கவர்ச்சி கன்னி கனகாவின் பரம ரசிகன்
இன்னொருவர்: நான் அவளது பரம புருஷன், உண்மை கணவன்

ஒருவர்: நான் நேற்று பஸ்சில் போகையில் விமானத்தில் போவது போல் கனவு கண்டேன்
இன்னொருவர்: நான் நேற்று விமானத்தில் போகும்போது, பஸ்சில் போற மாதிரி கனவு கண்டேன்

ஒருவர்: என் மனைவி எனக்கு பரிமாறிய பின்னர் தான் தானும் சாப்பிடுவாள்
இன்னொருவர்: என் மனைவி சாப்பிட்டு விட்டு மீதி இருந்தால் எனக்கு பரிமாறுவாள்

டிரைவர்: ஏம்ப்பா, வண்டியில் கூட்டம் ஜாஸ்தியா கீது, இனி ஏத்தாதே
கண்டக்டர்: நீ ஒண்ணுப்பா, நானா ஏத்துறேன், அவங்களே ஏறிக்கிறாங்க

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (11-Aug-21, 11:06 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 394

மேலே