அன்றும் இன்றும்
நாட்டு கொடிக்கு பச்சை ஆரஞ்சு வெள்ளை என மூன்று நிறம்
என் வீட்டு முல்லை கொடிக்கு வெள்ளை பச்சை, இரு நிறம்
தேசதந்தை காந்தி எப்போதும் அணிந்த உடை காதி
நான் காதி அணிந்தால் என்னாகும் நம் நாட்டின் கதி?
அன்று பாரதியார் முழங்கினார் நம் சுதந்திரத்திற்காக
இன்று சத்தமின்றி முனகுகிறவம் தனி சுதந்திரத்திற்காக?
அன்று வெள்ளைக்காரன் அது அதுக்குன்னு வரி போட்டான்
இன்று கொல்லையில் எவனோ பூவை கிள்ளிகினு பூட்டான்
தேச தலைவர்கள் அன்று சிறையே வீடாக இருந்தார்கள்
இன்று நாட்டு மக்கள், வீடே சிறையாக இருக்கிறார்கள்
மவுண்ட் பேட்டன் மனைவிதான் லேடி மவுண்ட் பேட்டன்
ஜவர்ஹலால் நேருவின் துணி எல்லாம் உயர்ந்த காட்டன்
அன்று சிலர் அலுவலகத்திலிருந்து நேராக சிறை சென்றனர்
இன்று அலுவலகம் செல்லாமலே பலர் கதை செய்கின்றனர்
அன்று 'வெள்ளையனே வெளியேறு' என்று பல போர்க்குரல்
இன்று 'கரோனாவே எங்காச்சும் போய் சாவுன்னு' கூக்குரல்
அன்று நள்ளிரவில் தலைவர்கள் விழித்ததால் பேய் இல்லை
இன்று தலைவர்கள் இருப்பதால் இரவு பேய் வருவதில்லை
அப்போ உப்பு சத்யாகிரகம், கடலில் போய் உப்பு எடுத்தனர்
இப்போ சுதந்திர வாழ்த்துகள் முழங்கி ஓய்வு எடுக்கின்றனர்
ஆகஸ்ட் 15 மட்டுமே நமக்கு சுதந்திரமாய் கொண்டாட்டம்
மற்ற நாட்கள் எல்லாம் எப்போதுமே பெரும் திண்டாட்டம்
இதை படிக்காமல் இருக்க உங்களுக்கு பூரண சுதந்தரம் உண்டு
ஆனால் ஒரு வேளை படித்துவிட்டால் பூரண நிம்மதி உண்டோ?
ஆனந்த ராம்