மாப்பிள்ளையாத்தான் இருக்கட்டுமே கணக்கு கணக்குதான்

வாழைபந்தலும் தோரணமும் வாசலை அலங்கரித்தது
மாவினால் கோலங்கள் மண்டபத்தை அழகுபடுத்தியது
சந்தனம் ஜவ்வாது வருவோரின் மேல் மணம் பரப்பியது
நாத(ஸ்வரம்) மேளம் அங்குள்ளோர் காதுகளில் பாய்ந்தது
சூடான பில்டர் காபியின் மணம் எங்கும் ஊடுருவியது
மண மேடையில் மணமகள் அழகுடன் வீற்றிருந்தாள்
மணமகளின் பெற்றோர்கள் ஆவலாய் அமர்ந்திருந்தனர்
மணமகனின் தாய் தந்தையும் இவர்களுடன் இருந்தனர்
சடங்கு மந்திரம் கணீரென்று ஒலித்துக்கொண்டிருந்தது
சபையில் உள்ளவர்கள் பேச்சு சலசலத்து கலகலத்தது

முகூர்த்த நேரம் வேகமுடன் நெருங்கிக்கொண்டிருந்தது
மாப்பிள்ளை எங்கே என்று ஓதுவாரின் குரல் கேட்டது
மண்டபத்தில் உள்ளவர்கள் மேடையை நோக்கினார்கள்
இரண்டு போலீஸ்காரர்கள் வாசலில் காவல் காத்தனர்
மணமகன் தேநீர் குடிக்க கொஞ்சம் வெளியே சென்றார்
அவர் மண்டபத்திற்குள் வர அனுமதிக்கப்படவில்லை
உள்ளிருப்பவர்கள் போலீசை அதிர்ச்சியுடன் கண்டனர்
"அவர் இந்த திருமணத்தின் மாப்பிள்ளை கதாநாயகன்
இன்னும் ஐந்து நிமிடத்தில் அவர் தாலி கட்ட வேண்டும்
உடனேயே உள்ளே அனுப்பி வையுங்கள் என்று அலறல்"

போலீஸ் பதட்டமின்றி சொன்ன பதில் என்ன தெரியுமா?
"ஏற்கெனவே மண்டபத்தின் உள்ளே 50 நபர்கள் உள்ளனர்
கரோனா தடுப்பு விதியின் கீழ் 50 பேருக்கு தான் அனுமதி
உள்ளே இருப்பவர்களில் ஒருவர் வெளியே வந்தால் தான்
மாப்பிள்ளையை எங்களால் உள்ளே அனுமதிக்க முடியும்"

இதுதான் சாக்கு என்று மாப்பிள்ளை மேளம் கொட்டுபவரை
வெளியே வர சொன்னார், நன்றி சொல்லி உள்ளே சென்றார்
உள்ளே சத்தம் குறைந்து, திருமணமும் நேரத்தில் நடந்தது

(மேளக்காரருக்கு கூடுதலாக 500 ரூபாயும் கிடைத்தது)

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Aug-21, 3:43 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 280

சிறந்த நகைச்சுவைகள்

மேலே