வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கை
📠📠📠📠📠📠📠📠📠📠
வெள்ளை அறிக்கை வெளியே வந்து பல்லை காட்டி இளிக்கிது
பிள்ளை பிள்ளை தலைமுறைக்கும் -கடன்
தொல்லை நமக்கு இருக்குது

அடகு வச்ச நகைய மீட்டு
"அட்டகாவி"ல் வித்து புட்டு -குடும்ப
அட்டைக்கான மூனு இலட்சம்
ஒழுங்காக கடனை கட்டு

வங்கி கணக்கில் ஆறு இலட்சம்
வரவு வைக்க ஆசைப்பட்டு
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டு
தொடங்கி வச்சே மெனக்கெட்டு

சட்டியில ஒன்னுமில்ல
சாய்ச்சு நமக்கு காட்டியாச்சு
அகப்பையில தோண்டி திங்க
ஆசைப்பட்டத என்ன சொல்ல

ஆயிரம் ரூபாய் பொங்க வச்சு
ஆசையாத்தான் தின்னு புட்டே
இலட்சத்தில கடனை கட்ட
கைரேகையும் வச்சு புட்டே

கந்துவட்டி கந்தன்கிட்ட
கணக்கு போட்டு பார்க்க சொன்னே
எந்த வட்டி போட்டு கூட
இந்த கணக்கை தப்பே சொன்னான்

வரிசையில நின்னு நின்னு
வாங்கி தின்ன இலவசம்
வாந்தி வரத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் - அது
உணவு அல்ல பெரு விஷம்..
🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭

எழுதியவர் : க.செல்வராசு (12-Aug-21, 2:43 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vellai arikkai
பார்வை : 57

மேலே