வயதின் முதுமை
வயதின் முதுமை
அக்கம் பக்கம்
அருமை தெரியும்
எட்டி பார்த்து
எப்படி இருக்கிறாய்?
யாராவது ஒருவர்
கேட்க
ஏங்கி தவிக்கும்
வலிய சென்று
வாய் பேச
துறு துறுக்கும்
அரசியலோ,விளையாட்டோ
சமூகமோ விளக்கி
பேச ஆள்
தேடும்
என்னை எனக்குள்
தேடி அலுத்து
ஏங்கி தவிக்கும்
இந்த வயதின் முதுமை

