சுதந்திரம்

போராடி சுதந்திரத்தை
பெற்றுக் கொடுத்ததால்
நாட்டின் தலைவர்களாய்
போராட்டத்தை விதைத்தனர்

அடுத்தடுத்த தலைவர்களும்
சுதந்திரத்தை மதித்து
நாட்டுக்காய் உழைத்து
மகிழ்ச்சியை விதைத்தனர்

இன்றைய தலைவர்கள்
சுதந்திரத்தை மிதித்து
சுயநலமாய் உழைத்து
ஊழலை விதைக்கின்றனர்

நாளைய தலைவர்களுக்கு
சுதந்திரம் என்பது
இனிப்பு கொடுக்கும்
தினத்துடன் முடிந்திடுமோ...!!!

எழுதியவர் : பெல்ழி (15-Aug-21, 2:22 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
Tanglish : suthanthiram
பார்வை : 3589

மேலே