ஆசை ஆசை ஆசை

ஆசை ஆசை ஆசை
ஆசைக்குள் புகுந்து அடம்பிடிக்க ஆசை;
அன்பைச் சொரியும் இதயத்தில் இடம் பிடிக்க ஆசை;
ஆழ்கடலில் ழூழ்கிவர ஆசை;
அதிசயத்தை அரங்கேற்ற ஆசை;
அசிங்கத்தை அழித்துவரஆசை;

அனாதை என்ற வார்த்தையே
அகிலத்தில் இல்லாமல் ஆக்க ஆசை;
அன்னை தந்தை பாசத்தை மதிக்காதவனை
மிதித்துவர ஆசை;
அராஜகம் ஊழல் செய்பவனை
அடித்தே திருத்திவர ஆசை;
அண்டை வீட்டாரிடம் அன்புடன் பழகிட ஆசை;

போராசை விடித்தவனை
பேயாய் மாற்றிட ஆசை;
ஓயாமல் சொலச் சொல வென்று பேசுபவனின் வாயை தைத்துவர ஆசை;
பேசாமல் ஊமையாய் மௌனம் சாதிப்பவனுக்கு
வாயாடிக்கு வரன் பார்க்க ஆசை;
காசு காசு என்று காசை இருக்கிவைக்கும் கஞ்சனை
தூங்க விடாது துடிக்கவிட ஆசை;
காசுபணத்தை அவனிடம் இருந்து காந்தத்தை வைத்து சுருட்டிவர ஆசை;
கடவுள்பெயரை சொல்லி ஏப்பம் விடுபவனை
கட்டாந்தரையில் போட்டு
கல்லால் அடித்துவர ஆசை;
ஆசைகாட்டி மோசம் செய்பவனை அடைத்து வைக்க ஆசை;

ஆகாயத்தில் விழுந்து புரண்டுவர ஆசை;
அந்தரங்க ரகசியங்களை பார்த்துவர ஆசை;
இமைக்குள் புகுந்து
இளைப்பார ஆசை;

இலையின் மீது கிடந்து படுத்துறங்க ஆசை;

இரக்கம் இல்லா மனிதனின்
இதயத்தை எட்டிப்பார்க ஆசை;
எரிந்து விழும் மனிதனின் கண்ணுக்குள் எரி மூட்ட ஆசை;
கேலிசெய்பவன் வாயில் கசப்பை ஊத்தி கேளிக்கைபார்க்க ஆசை;

பாசை தெரியாதவனிடம் பழகி ஆசையாய் திட்டிவர ஆசை;
பாயும் நதியை கையில் பிடிக்க ஆசை;
பாயாசத்திற்குள் புகுந்து சுவையை குடித்துவர ஆசை;
பழைய நினைவுகளை படம் பிடித்து பார்க்க ஆசை;
அழையாதவன் வீட்டில் போய் சாவகாசமாய் சம்மனம் கூட்டி அமர்ந்து உணவு உண்ண ஆசை;

வசனம் பேசுபவனிடம் வாசம் செய்ய ஆசை;
வைத்தெரிச்சல் படுபவனின் வயிற்றுக்குள் புகுந்து பார்த்து வர ஆசை;
ரோசக்கானின் ரோசத்தை பிடித்து பாட்டிலில் அடைக்க ஆசை;

வழுக்கு மண்டை தலையில் சறுக்கி விளையாட ஆசை;

கிறுக்கு பிடித்தவனுடன் கிறுக்கி எழுத ஆசை;
கிறுகிறுக்கும் போதையில் இருப்பவனிடம் கணிதம் கற்று வர ஆசை;

இசைக்குள் புகுந்து ரசித்துவரஆசை;
இருட்டைச் சுமந்துவர ஆசை;
இடியும் மின்னலையும் எடுத்துவர ஆசை;
மேகத்தைப் பிடித்து மேனியில் போத்திட ஆசை;
வெண்ணிலவைச் சுற்றி வேலிபோட ஆசை;
விண் மீன்களை விதைத்து விவசாயம் செய்ய ஆசை;

விவசாய நிலத்தை
விலை நிலமாக்குபவனை
விரட்டி அடிக்க ஆசை;
பாயும் அருவியின் பயத்தை போக்கிவர ஆசை;
பாசாங்கு செய்யும் மனிதனிடம்,
பயத்தை மூட்டிவிட ஆசை;
பசியில்லா உலகை, படைத்திட ஆசை;

பசுமையை, பார்முழுவதும் பரப்பிவிட ஆசை;
பாலின் வெண்ணையை பிரித்துவர ஆசை;
பாயாசத்தில் இனிப்பை பார்த்துவர ஆசை;
பசியின் கொடுமையிடம்
பாடம் படித்துவர ஆசை;
பகலை இரவாய் மாற்ற ஆசை;
வாடிய பயிர்களுக்கு
வாயார உணவு ஊட்டிவர ஆசை;
வாயாடியின் வாய்க்கு
வாய்பூட்டுபோட ஆசை;
வம்பு பேசுபவனை
கம்பால் அடித்துவர ஆசை;

சுடும் தீயிடம்
கடும் சண்டைபோட ஆசை;
விடும் புகையை
விஞ்ஞானத்தால் விசைசக்தியாக்க ஆசை;
கழிவுகள் இல்லா உலகை ஆக்கிட ஆசை;
கனிவு இல்லா மனிதனை
கடல் தாண்டி விட்டுவர ஆசை;
கடல் அலைமீது அமர்ந்து
கடலில் பவனிவர ஆசை;
அல்லித் தண்டை பிடிங்கி
பருத்த இடைக்கு பாவாடை நாடா தைக்க ஆசை;
பாசியைத்தின்று
பசியைப்போக்கிட ஆசை;
இளமங்கையின் தோளில் தொங்கும் சேலையாய் இருந்து வர ஆசை;
இலை தழைகளை கட்டி வாழ்ந்த மனிதர்களை பார்த்துவர ஆசை;
மலை உச்சியிலிருந்து குதித்து விளையாட ஆசை;
மனக்கதவை திறந்துபார்க்க ஆசை;

மதியான வெயிலில் மல்லாக்கக் கிடக்க ஆசை;
மழைத்துளிகளை முத்துக்களாய் உடலில் சுமந்திட ஆசை;
வியர்வைத் துளிகளை பனித்துளிகளாய் மாற்ற ஆசை;
மழலையின் மொழியில் பாடம் பயில ஆசை;
உலகைச் சுமந்து உல்லாச பயணம் போய்வற ஆசை;
உறவைச் சுமந்து உதைவாங்கிவற ஆசை;
உயிரைப் பிரித்து உடலைவிட்டு
ஒருநாள் இருந்துவர ஆசை;

ஓடும் நதியுடன் ஓட்டப்பந்தையம் நடத்த ஆசை;
ஆடும் மரக்கிளைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்திட ஆசை;
அடிக்கும் காற்றை
அள்ளிப்பருக ஆசை;
அறியாமை இருளை போக்க ஆசை;
அடுப்புக்குள் புகுந்து நெருப்புடன் பழகிவர ஆசை;

அயோக்கியர்களைப் பார்த்து;
அகிம்சை சொல்லித்தர ஆசை;
ஆறுமேல் மிதந்து கடலை அடைந்திட ஆசை;

மழலையின் சிரிப்பில்; முத்துகுளித்து வர ஆசை;
பூக்கள்பூக்கும் ரகசியத்தை பார்த்துவர ஆசை;
பொடிபோட்டு தும்பி
சகுணத்தை அழைத்துவர ஆசை;

குளத்தில் குவளையாய் மலர்ந்து
குமரியின் குளியலை பார்த்திட ஆசை;

பாலியல் கொடுமை செய்பவனை
பழிதீர்துவர ஆசை;

மன்மதனிடம் சென்று மாற்று உடை வாங்கிவர அசை;
மக்களை துன்புருத்தும்
விலங்குகள் நிறைந்த உலகை பார்த்துவர ஆசை;
தடையே இல்லா உலகில் தவம் செய்து வர ஆசை;
தண்டனையே இல்லாத தேசத்தில் வாழ்ந்துவர ஆசை;
போட்டி பொறாமை இல்லா மனிதனை
போய்பார்த்து வர ஆசை;

நோயில்லா மனிதனை கும்பிடு போட்டு கூப்பிட்டுவர ஆசை;

வாயில்லாத மனிதனிடம் வாழ்க்கையின் வழிகாட்டுதலை கேட்டுவர ஆசை;
வாழைப்பழத் தோலில் வழுக்கி விளையாட ஆசை;
வாய்விட்டு சிரித்து
துன்பத்தை விரட்டிட ஆசை;

துறவியிடம் அமர்ந்து
உறவின் ரகசியத்தை கேட்டுவர ஆசை

பிரம்மச்சாரியிடம் இருந்து
வாழ்கையின் சலிப்பை கேட்டுவர ஆசை;

சம்சாரியைப்பார்த்து சண்டை சச்சரவு இல்லாத குடும்ப வாழ்க்கை சுவாரசியத்தை கேட்டு வர ஆசை;

துரு துரு கண்ணை துருப்பிடிக்க வைக்க ஆசை;

தொடை நடுங்கியிடம்
மர்மக்கதைகேட்க ஆசை;
தொடுவானில் துணிதோய்த்து காயப்போட ஆசை.

ஆசை ஆசை ஆசை
ஆசையை அழித்து ஆன்மாவை சுத்தப்படுத்த ஆசை.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (17-Aug-21, 10:10 am)
Tanglish : aasai aasai aasai
பார்வை : 905

மேலே