கண்ணா பின்னா மண்ணா தென்னா
மண்ணுன்னி மாப்பிள்ள யேகா விரையே கூவிரையே
உங்களப்பன் கோவிர் பெருச்சாளி யேகண்ணா
பின்னாமண் ணாதென்னா சோழங்கப் பெருமானே
கம்பருக்கு பலரும் பாராட்டி பொன்னும் வைரமும் வழங்கி கௌரவித்ததைப்
பார்த்த பலருள் விறகு வெட்டியா னொருவனின் மனைவி யானவள் பாட்டுப்
பாடினால் பொன்னும் பொருளும் கொடுக்கிறார்கள். நமது கணவனும் அரசரிடம்
பாட்டுப் பாடினால் நல்லp பரிசு கிடைக்கும் என்று எண்ணினாள். அப்படியே
தன் கணவனை ஏதாவது கட்டிக்கொண்டு பாடி பரிசு வாங்கி வரும்படி
அனுப்பினாள்
அவனும் தெருவில் குழந்தைகள் பேசியதை யெல்லாம் கற்றுக் கொண்டு
அரசனிடம் தானும் பாடுவதாக சொல்லி நுழைந்தான். அரசனும் அவனைப்
பாடசொல்ல மேலேயுள்ளபடி உளரினான்? எல்லோரும் கைகொட்டி
சிரித்தார்கள். பின்பு அவனை விளக்கமளிக்கப் புலவர்கள் கேட்டார்கள்.
கம்பனோ இவர்பரிசு வாங்கும் எண்ணத்தில் வந்துள்ள வொரு யேழைஎன்று
தெரிந்தது. வர்களை யெல்லாம் அடக்கினார் .கம்பர் அவனுக்கு உதவ எண்ணி.
மற்றவர் களிடம் நாமெல்லாம் கற்றறிந்த புலவர்கள். ஆகையால் நாமே இந்த
பாடலுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விளக்கததை
அவரே சொல்ல ஆரம்பித்தாராம்.
இப்பாடலில் சீர்கள் அளவில்லாது குறைந்தும் மிகுந்தும் வருவதால் இது இணை குறள்
ஆசிரியப்பா வென்றும். சொல்லி விளக்கினாரம்.
மன்னுண்ணி =. மண்ணைத்தின்ற திருமாலின் அவதாரமே
மாப்பிபிளையே = மா (லட்சுமி யின் பிள்ளை போன்றவனே))
காவிறையே =. கற்பகத்தின் இறையே
கூவிறையே. =. கூ =. பூமி க்கு இறையே
உங்களப்பன் கோ. =. உங்கள் தத்தையும் அரசனே
விர்=. வில்லெறிதலில்
பெரு =பெரிய
சாளி (ஆளி). =. தும்பிக்கையுடைய பலம் பொருந்திய சிங்கமாம்
கண்ணா =. மக்களுக்கு கண் போன்று இருப்வனே
பின்னா. =. செல்வ செழிப்புள்ளவனே
மண்ணா. =. பெரிய நிலப் பரப்புள்ளவனே
தென்னா. = தெற்கே ஆளும் மன்னவனே
சோழப் பெருமானே. =. வாழ்க சோழப் பெருங்குடி மன்னனே
என்று விளக்கினராம்.
ஒட்டக்கூத்தனோ இதையறிந்து கம்பன் எதையும் உண்மையென்று நம்பும் படி
சொல்லி ஏமாற்று கிறானே என்று பொறாமை கொண்டானாம்.. மன்னர் அந்த
விறகு வெட்டிக்கு வேண்டிய பொருள் கொடுத்து அனுப்பினானாம்.