கவிச் சக்கரவர்த்தி கம்பர்

விளம். மா. மா. அரை யடிக்கு என்ற கணக்கில் 6 சீர் விருத்தம்


அம்பிலே சிலையை நாட்டி யமரர்கன் றமுத மீந்த
தம்பிரா னென்னத் தானும் தமிழிலே தாலை நாட்டிக்
கம்பநா டுடைய கோமான் கவிச்சக்ர வர்த்தி பார்மேல்
நம்புபா மாலை யாலே நரக்குமின் றமுத மீந்தான்

கம்பர் இராமாயணத்தை தமிழ் சங்கம் ஏற்பதற்குத் தயங்கி பல வைணவ அறிஞசர்
களிடம் ஒப்புதல் வாங்கி வரும்படி சொல்ல அங்குபோய் ஒப்புதல் பெற்றார். ஆனாலும்
அவர்களை வடக்கேயுள்ள சமஸ்கிருத பண்டிதர்களையும் கலந்து அவர்களது ஒப்புதல்
பெற்று வரும்படி அறிவுறுத்தினார். இப்படி பல இடங்களிலும் அலைகழிக்கப் பட்டு
மாதக்கணக்கில் செலவழித்து அரங்கேற்றம் செய்தார். கம்பர் இயற்றிய இராமாயணம்
பலராலும் போற்றப் பட்டு பட்டி தொட்டி யெல்லாம் இராமாயணக் கதாக் காலட்சேபம்
நடத்தப்பட்டு பரவியது. ஶ்ரீரங்கத்தில் இராமாயணம் அறங்கேற்றியபின்
ஶ்ரீரங்கப் புலவர் ஒருவர் கம்பர் மேல் ஒரு பாடல் பாடி கம்பரைக் கவிசசக்கரவர்த்தி
என்று முதன் முதலில் அந்தக் காலத்திலேயே பாராட்டப் பெற்றுள்ளளார்..
அந்தப் பாடலை காணுங்கள்.

எழுதியவர் : சேர்த்தது பழனி ராஜன் (17-Aug-21, 6:43 pm)
பார்வை : 40

மேலே