கைபார்த்த மருத்துவன் நடத்தை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கன்மவுரு நோயதைமுக் கண்கொடறி வுற்றறிந்தார்
தன்ம,நீ ராடற் சதத்துடனெட்(டு) - இன்மையெனில்
அங்கைபதந் தூய்மையின்றேல் அங்குலிபூ வெற்றலின்றேற்
கங்கை பதம்புனிறு காண்

- பதார்த்த குண சிந்தாமணி

மருத்துவன் மூன்று விரலால் நாடி பார்த்தறிதல் வேண்டும்; மேலும் எட்டு வித தேர்வுகளால் நோயறிந்த மருத்துவர்கள் 108 நீராடல், அல்லது கை கால்களைச் சுத்தஞ்செய்தல், அவ்விரலைப் பூமியில் தட்டுதலாம் இவ்வாறு செய்யவில்லையெனில் மருத்துவன் செயலும் மருந்தும் பலன்தராது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Aug-21, 12:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே