தகுதியைத்த் தேடு
நேரிசை வெண்பா
எவ்வகை ஆட்சியும் ஏறிட சட்டமைப்பு
துவ்வான் நுழைய புரியான்பார் -- அவ்வியத்
தில்பலதை ஓர்ந்திடாத் தேர்வன் அவமானத்
தில்குறுகிச் சாவான் பிறகு
அரசியலமைப்பு கொண்டமாகிலும் படிக்காது பதவியேற்றல் சரிப்படாது.
அரசாங்கம் என்பது மக்களின் சாதிக்கும் மதத்திற்கும் பாதகம் செய்யா
வண்ணம் அவற்றை பாது காக்க வேண்டும் என்கிறது. ஆனால் இன்றைய
அரசியல் வாதிகளெல்லாம் அந்த வாசகத்தை நுணுக்கமாகப் படிக்காது
தவறாக புரிந்து கொணடுள்ளார்கள்.. சாதி மதம் பார்க்காது சட்டம்
போடவேண்டும் என்று நினைத்து தவறாக செயல் பட்டு கோர்ட்டில்
அவமானப் படுகிறார்கள். கோயில் அர்ச்சகர் கதை யிப்படித்தான்
நிறைவேற்றி யிருக்கிரார்கள்.
சட்டம் என்னவோ சரியாகத்தான் இருக்கிறது. அதை சரியாகப் படிக்காதவன்
ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். அரசியலுக்கு வருமுன் சட்டத்தினை
டியூஷன் வைத்தாவது படிக்க வேண்டும்.