காணாத காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதைகள் எழுதும் தமிழின் கவிதைக்கும்
கற்பூர வாசனை அறிந்திடா கழுதைக்கும்
முகமறியாமலே முகப்புத்தகத்தில் காதல்
தொலை தூரமாய் நீயும் நானும்
தொலைபேசியில் அன்றும் இன்றும்
தொடரும் நம் காதலும் காவியமாய்
நவீன தொடர்பாடல் பல இருந்தும்
தொலைபேசியில் மட்டும் நாம் தொலைந்தோம்
இரவுகள் கூட பகலாய் நினைத்தோம்
மூவிரண்டு ஆண்டுகள் சிட்டாய் கடந்தும்
முகத்தினை நேரில் பார்த்ததுமில்லை
காணொளியில் கண்டு வியந்ததுமில்லை
புகைப்படங்களும் செய்திகளுமே நமக்கு சாட்சி
நம்பிக்கை ஒன்றே காதலின் நீட்சி
வாழ்ந்திட வேண்டும் யுகங்கள் தாண்டியே