கழற்றிபோட்ட கசமாலம்

எண்ணத்தில் உயர்ந்தவனாயிரு
செயலில் உயர்தவனாயிரு

பதவியில் உயர்ந்தவனாயிரு
பட்டத்தில் உயர்ந்தவனாயிரு

பகட்டில்உர்ந்தவனாயிரு
பணத்தில் உயர்ந்தவனாயிரு

ஒருக்காலும்
பிறப்பில்
உயர்ந்தவனாய் இருக்கவே முடியாது
சொன்னாலும்
அதைஏற்கமுடியாது

என்னைப்போல
விந்துக்குப்பிறந்தவன்நீ
அதில்
விந்தையென்ன
இருக்கப்போகுது?
என்னைப்போல
செத்துமடிகிறவன்நீ
இந்த ஜென்மத்திலென்ன
பேதமிருக்கப்போகுது?

மாடுதின்றவன்நீ
மரக்கறிதின்றவன்நான்
கொன்றுதின்றவன்நீ
கொல்லாமை கற்றவன்நான்
எதில்உயர்ந்தவன்நீ?

நீவேற்றுநாட்டிலிருந்து வந்தவன்வெள்ளையாய் இருந்துவிட்டுபோ
நான் கரிசல்காட்டில்பிறந்தவன் கருப்பாகவேஇருக்கிறேன்

நான்தாழ்ந்தவனல்ல
என்றுதெறிந்தபோது
நீஉயர்ந்தவனல்ல
என்றுஉரக்கச் சொல்வேன்


கசமாலத்தை கழற்றிபோட்டேன்
உறுமால்களை
உதறிப்போட்டேன்
மனமாற்றத்தை
அணிந்துகொண்டேன்
மனிதனாய்புது
அவதாரம்கண்டேன்
புதுவிடியலை
பூமியில்கண்டேன்

எழுதியவர் : (18-Aug-21, 7:29 pm)
சேர்த்தது : பபூதா
பார்வை : 42

மேலே