சாமிக்கு ஆசாமி நியமனம்

நேரிசை ஆசிரியப்பா


அர்சனைதத் தட்டை வாங்குப வனுக்குத்
அர்ச்சனை யார்செய் யவேண்டும் என்ற
உரிமை இல்லயாம் நம்மிடம் ஒட்டு
போடென கெஞ்சிய வனின்று அர்ச்சனைத
தட்டவ னிடம்தா யிவனிடம் தாவெனக்
போட்டா னேயோர் சட்டம் நியாமா
உங்கள் கால்செருப் பாயிருப் பேனென்
றவரா கடல்கட் டுமரமென் றாரே
காப்பேன் எனறவ ரேயின் றிடைஞ்சல்
சாமியில் லையென் றவனும்
அர்ச்சகர் நியமித் தல்சரி யாமோ

பழமொழி யொன்று சொல்வார் கேளும்
நரிக்கு நாட்டா மைத்தர கேட்குமாம்
கிடைக்கு நாலு ஆட்டை அதுண்மை
ஒட்டு கேட்க கால்பிடிப் பரப்போ
பெற்றபின் எட்டி உதைப்பன் இப்போ
அரசியல் அமைப்பை இவனும் அறியான்
இவன்நண் பனுமறி யானாம் படித்திட
தெரியா தாசட்டம் அரசியல்
சட்டம் கோர்ட்டில் வாதிட வேண்டுமோ



....

எழுதியவர் : பழனி ராஜன் (19-Aug-21, 6:48 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே