முதல் பார்வை

உந்தன் "முதல் பார்வை"
எந்தன் மீது வீழ்ந்தது
சொக்கிப்போய்
மூச்சுப்பேச்சில்லாமல்
நான் நிற்கையில் ...!!

என் இதயத்தில் நீ நுழைந்து
"சிம்மாசனம்" போட்டு
"இதய ராணியாக"
அமர்ந்து கொண்டாய் ..!!

நானும் உனது செயலுக்கு
"முதல் மரியாதை" கொடுத்து
"ராஜாதி ராஜனாக" இருந்து
உன்னை பாதுகாக்க
முடிவு செய்து விட்டேன் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Aug-21, 9:54 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : muthal parvai
பார்வை : 326

மேலே