நீயில்லாத நாட்களில்

நீயில்லாத நாட்களில்
நீளும் காலங்கள் எல்லாம்
நீங்கா உன் நினைவுகளுடன் ...

நினைவுகளாய் நிறைந்து என்
நிகழ்காலத்தை கடத்தி
கடந்த காலத்திற்கு அழைத்து
செல்கின்றன உன்னுடனான
என் நினைவுகள் எல்லாம்...

நீ என்னுடன் இருந்து நான்
பயணித்த காலங்கள் மட்டுமே
இன்றும் பசுமையாய் என்
நினைவுகளில் ...

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ)
+91 -98438 -12650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன் கோவிந்தன் ( மகோ) (20-Aug-21, 4:55 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 3315

மேலே