கவிதை
"கவிதை எழுதுவது ஒரு 'தகுதி' அல்ல, அது உணர்வு வெளிப்பாட்டின் ஒரு 'பகுதி'.
இளமையில் காதலாய், முதுமையில் சாதலாய்,
உறவின் நடுவில் குறுகி , தனிமைத் துயரில் பெருகி,
நம்மை கொல்லும் ,இறுதியில் வெல்லும்,
அந்த கவிதையை விரும்பாதோர் இலர்,
வார்த்தையில் வடிப்போர் சிலர்,
அது வராது தவிப்போர் பலர்..
அத்தகு கவிதை எழுத என்ன தேவை?
அழகிய எதுகை மோனைகளோ ?
அல்லது தெளிந்த நினைவுகளின் சேனைகளா ?
தேர்ந்த கற்பனையோ ? அல்லது இயற்கை அது தரும் கருவின் விற்பனையோ?
விளையாடும் சொற்களின் அலங்காரமோ? அல்லது
அனுபவம் என்ற இனிப்பு
பலகாரமோ?
அல்ல,அல்ல,
பின் எதுதான் தேவை?
மனதில் ஈரம், வாழ்வில் சாரம்,
இவை இரண்டும் இருந்தால் போறும்
கிடைக்குமே கவிதை எனும் சுவைமிகு சேவை."