கரும்பலகை நாட்கள்

சுத்தமாய் துடைத்து வைக்க நாளுக்கு ஒருவராய் நியமித்து மகிழ்ந்த நாட்கள்

ஆளுக்கு ஒரு டஸ்டர் (துடைப்பான்) தயாரித்து வைத்திருந்த நாட்கள்

டஸ்டரை மற்றைய வகுப்பினர் எடுத்து சென்றால் சண்டை பிடித்து திருப்பிப் பெற்ற நாட்கள்

அழியாமல் இருக்க வேண்டியவற்றை வெண்கட்டியை தண்ணீரில் நனைத்து எழுதிய நாட்கள்

மனதுக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை சேர்த்து எழுதி ரசித்த நாட்கள்

எதிரியின் பெயரை யாருடனாவது சேர்த்து எழுதி போட்டுக் கொடுத்த நாட்கள்

ஆசிரியர் தினம், விஜய தசமி நாட்களை வண்ணங்களால் எழுதி அழகுபடுத்திய நாட்கள்

வலது, இடது இரண்டு கைகளாலும் சவாலுக்காய் எழுதி ஜெயித்த நாட்கள்

கடினமான கணக்குகளை ஆசிரியருக்கு முன்னே தீர்த்து காட்டி பாராட்டு பெற்ற நாட்கள்

கதைத்தோர், அதிகம் கதைத்தோர் என பெயர்களை எழுதி பயம் காட்டிய நாட்கள்

ஒரே அளவில் அழகாய் எழுதி 'நீ பெரிய ஆர்டிஸ்ட் ஆக வருவாய்' என பெயர் வாங்கிய நாட்கள்
.
.
.
.
.
இன்றும் தெருவோர பள்ளிகளில் கரும்பலைகள் காணும் போது மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் பசுமையான நினைவுகள்.

எழுதியவர் : பெல்ழி (29-Aug-21, 1:44 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 300

மேலே