இறைவன்

தன்வசம் கொண்ட பகுதியால் இறைவன்
அண்டங்கள் எல்லாம் படைத்தான் அதில்
காணும் அத்தனை பொருட்களுமாம் சித்அசித்
எல்லாமாம் இவற்றில் எல்லாம் தானிருந்து
அதில் இல்லாமல் தனித்திருப்பவனும் அவனே
உன்னுள் என்னுள் அதனுள் எல்லாம் அவனே
அவனில்லா அணு ஏதும் இல்லை
இதை அறிந்திடாது நான் பகுத்தறிவாளன்
என்கின்றான் மனிதன் அகந்தையின் தாக்கத்தால்
இவன் இதைப் பகுத்து எதை அறிந்தான்
எதையும் அறியா மூடன் அல்லவா இவன்
இந்த அகந்தை இவனை விட்டு அகன்றால்
இவனும் 'அவன் பாதம்' காண்பான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Aug-21, 12:04 pm)
Tanglish : iraivan
பார்வை : 254

மேலே