கோகுலாஷ்டமி தின வாழ்த்துக்கள்

நல்லவர்களை காத்து, தீயவர்களை அழிப்பது
நியாயமான தர்மத்தை நிலை நாட்ட
தர்மம் செழிக்க உழைத்தவன் நீ
பிறர் துன்பம் தீர்க்க வருபவன் நீ
அநியாயங்களை தட்டி கேட்பவன் நீ
குழந்தையாய் அவதரித்து அனைவரையும்
குதூகலப்படுத்திய அவன் நீ
இப்பொழுது உலகில் பல மனிதர்கள்
மனித நேயம் அற்ற சுயநலம் பெருகி,
வன்மம்,ஆசை, போட்டி பொறாமை போன்றவை
மிகுந்த தீ போல பரவி வருகிறது மனிதர்கள்
இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளால்
கொரோனா போன்ற கிருமிகளால் அழிவு
ஒரு பக்கம் இவற்றை எல்லாம் ஆராய்ந்து
நல்லது கெட்டது பார்த்து அருள்புரிய
வருவாயா தருவாயா புது அவதாரம்........
கண்ணனே உன்னால் மட்டும் அனைத்திற்கும்
தீர்வு காணமுடியும் உன் நாமத்தை நித்தம்
சொல்லும் எங்கள் வாழ்வு செழிப்படைய
புது அவதாரம் எடுத்து வா கண்ணா வா
அருள் தா கண்ணாத்தா.
அனைவருக்கும் எனது கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (30-Aug-21, 8:25 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 17

மேலே