மரமே மரணமிலா மருந்து

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

மண்ணிலே பலசுவை நிறைந்ததாய் இருப்பினும்
தனதின் வேறினால் உறிஞ்சி உண்டபின்
வளமிகு அரும்பென இலையாய் பட்டையாய்
காயென கனிகளாய் விளைந்துமே நிலம்வாழ்
உயிர்களும் செழித்து வாழ்ந்திட உதவிடும்
செடிகொடி மரங்கள் புல்லினம் கிழங்கினம்
புனலிலும் நிலத்திலும் மலையிலும் பாலை
என்றதாய் பலநிலை பிறப்பிடம் கொண்ட
தன்னுற் பத்தியால் உலகில் தமிழொடு
முதலில் தோன்றிய தாவர வகையினை
தொழுதால் நோய்களும் அகற்றிட வழியது
நொடியிலே கிடைத்திடும் என்பதை
அறிவில் வைப்பவர் உயர்வர் வாழ்விலே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Aug-21, 9:30 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 62

மேலே