தூக்கி எறிந்தார்கள்
சிறு விதை தானே என்று
என்னை அலட்சியம்
செய்தார்கள் ...!!
என்னை தூக்கி வெளியே
வீசி விட்டார்கள் ,,,!!
அந்த மனிதர்கள் மீது
நான் சிறிதும் கோபம்
கொள்ளவில்லை ,,,!!
மாறாக தூக்கி எறிந்த
மனிதர்களுக்கு
நன்றி சொன்னேன் ...!!
அவர்கள் என்னை
தூக்கி எறியாமல்
இருந்திருந்தால் ...!!
யாருக்கும்
பயன் இல்லாமல்
போயிருப்பேன் ..!!
இன்று உங்களுக்கு
ஆல்போல் வளர்ந்து
நிழல் தரும் மரமாக
இருக்க முடியாமல்
போயிருக்கும் ....!!
--கோவை சுபா