முடித்தாள் நடனம்

முடித்தாள் நடனம் !!

நடனமாடும் நடராஜன்
நீ நல்ல நடிகன்,
நீ ஒரு நல்ல நடிகன்.

நாடகங்கள் நடத்தியே
நாட்களை கழித்திட்டாய்
நடனமாடும் நடராஜா !

உன் நாடகம் எல்லாம்
உன்னுடனே !
எள்ளுக்கும் அவியாது
என்னிடமே ! - புரிந்ததா
நடனமாடும் நடராஜா ?

சொல் ,
நடிப்பதற்கா இடமில்லை ?
நடுராத்திரியில் அதுவும் !
இறந்தவர் உடல் மீது
இம்மியும் இரக்கமின்றி ,
நடனமாடுகிறாய் நீ.

உன்னை யார் தண்டிப்பது ?
அது முடிந்தால் !
உன்னோட சேர்ந்தாளே
அன்னை அவள் பராசக்தி ,
அவளால் மட்டுமே* முடியும் ,
அவளிடம் கூறுவேன் நான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

* சக்தி = energy. Definition of energy in Physics is" energy is the capacity to do work ". So she can stop him from dancing. Am I right or not ?

எழுதியவர் : சண்டியூர் பாலன் (31-Aug-21, 8:16 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 61

மேலே