தாய்க்கேட்ட பிறப்புக் கேள்வி

சின்னஞ்சிறு வாக்குவாதத்தின் போது
என்னைப் பெற்றவள் எனைப்பார்த்து
கேட்கிறாள் நீ அரிச்சந்திரனுக்கு பிறந்தவனா?
என்று பாவம் எனைச் சுமந்ததையே
மறந்து விட்டாள் போலும் - வேகமான
கோபத்தினால் விண்ணளவு உருவமெடுத்து
பொய் சொல்லும் பிறழ்ச்சி பேச்சும்
அவள் பேசும்போது நான் கேட்டதற்கு !

எனது தமயன் எட்டு காணி நிலத்தில்
பயிர் தொழிலும் அவன் மக்கள்
கல்லூரியில் முதுகலையும் முடித்திருக்க
என்னோடு என் மனைவி அரசு பணியிலிருக்க
எனது மக்கள் கல்லூரி, பள்ளிப் படிப்பிலிருக்க
நாங்கள் இருவர் வெவ்வேறு மாவட்டத்தில்
பணியிலிருக்க விவசாயந் தொடர்பான
பேச்சின் போது எந்தாய் எனைக் கேட்ட கேள்வியது!

வயிறாற எந்தாயுக்கு அவள் மூத்தமகன்
உணவிட்டதில்லை என்று அக்கம் பக்கத்தினரே
அரசல்புரசலாக கூற அதனால் அவளிருந்த
வீட்டிலே நான் குடியேறி அவளுக்கு யாதும் செய்ய
வீட்டின் தோட்டத்தில் தமயன் செய்த தவறைச்
சுட்டி எந்தாயிடம் கேட்டதற்கு அவள் கூறியது
அவனுக்கு நீ விட்டுக் கொடுத்தால்
கெட்டுப் போவாய் என்று - நியாயமே!

எந்தந்தை மறையும் தருவாயில் என்னிடம்
கூறிய வார்த்தையோ அண்ணன் முரடன்
அவனை அரவணைத்துச் செல்லென்று
அதை நான் பின்பற்றி அவனிடம் சினந்தணிந்து
செல்லும் போதும் சில நேரங்களில் கோபம் குத்தூசியால் என்னைக் குத்துகிறது அதனால்
அற்றாமையால் அரற்றும் போது அன்னையால் சொன்னதே நீ அரிச்சந்திரனுக்கு பிறந்தவனா?
தாயுக்கு மிஞ்சிய தெய்வமில்லையே!?!?......
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (2-Sep-21, 8:57 am)
பார்வை : 139

மேலே