அம்மா

நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ.
இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே....
உன் உதிரங்களை பாலாக்கி
என்னை ஒரு ஆளாக்கினாயே...
என் ஆடைகளின் சாயம் போக்கியவள்...
என் மனதின் காயம் போக்கியவள்...
என் உடல் நிலையின் உயர்வு நிலை அடையச்செய்தவள்...
இன்றோ உணர்வு இல்லாத நிலையை அடைந்திருக்கிறேனே ..
நீ சுற்றிய சேலை இன்று நான் சுற்றிக்கொண்டேன் உனது சுவாசத்திற்காக .....
எனக்காக பல தூக்கத்தை மறந்தவளின் ஏக்கத்தை என்னால் மறக்கமுடியவில்லையே...
என் அழுகை சத்தம் கேட்டு பல முறை நீ சிரித்து இருக்கிறாய் ...
இன்றும் நான் அழுகின்றேன் ஆனால் சிரிக்க நீ இல்லையே...
எனக்கு ஆசை,
உன் காதணியாக தொங்கி உன் கண்ணத்தில் முத்தமிடவும்...
உன் காலணியாக இருந்து உன்னை தாங்கி விடவும்....
எனக்காக பல தொழுகைகளும் பல அழுகைகளும் தாங்கியவளுக்கு
என் வலிகள் கொண்டு என் வரிகள் கொண்டு
எழுதி விடுகின்றேன்...
அழுது விடுகின்றேன் ...
எனது கவிதைகள் கொண்டு..... விதையை நட்டு வைத்தவளுக்கு நான் கவிதையை விட்டு வைக்கின்றேன் ....

எழுதியவர் : மதுரைவிசை (18-Sep-21, 1:35 am)
சேர்த்தது : மதுரைவிசை
Tanglish : amma
பார்வை : 2803

மேலே