மதுரைவிசை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மதுரைவிசை |
இடம் | : MADURAI |
பிறந்த தேதி | : 01-Jul-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 1270 |
புள்ளி | : 11 |
படிப்பு- முதுகலை வேதியியல் பட்ட படிப்பு
ஊர் -மதுரை
Instagram -madurai_poet
நண்பர்களால் உருவானவன்
நண்பர்களை உருவாக்குபவன்..
உன் மீது பைத்தியம்
உன்னாலே சிலருக்கு வைத்தியம்..
உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்...
இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்...
-மதுரைவிசை
வெற்றி ஒன்றே துவக்கம்..
ரசிகனை ரசிக்க வைப்பதே இவனுக்கு பழக்கம்....
நான் உங்கள் ரசிகன் என்பதே இவன் விரும்பும் பதக்கம்....
மாணவர்களுக்கு இவன் மாண்பு மிகு மாணவன்...
ஆணவம் பிடித்தவர்களுக்கு இவன் கில்லி...
உன்னைக் கண்டால் துள்ளாதமனமும் துள்ளுதே...
இளைய தளபதி என்ற வார்த்தை எனக்குள் அடிக்கடி சொல்லுதே...
உன்னைகண்டாலே குழந்தைகளுக்கு குஷி.
பெண்கள் மனதை வேட்டையாடும் வேட்டைக்காரனா..
வசிகரம் செய்யும் வசிகராவா...
பாதுகாக்கும் துடிக்கும் காவலனா நீ...
நண்பிகளின் உற்ற நண்பனா நீ..
வசனத்தில் புதிய கீதை
நடனத்தில் நீ புதிய பாதை..
மவுனம் கொள்ளும் புலி..
கத்தி தீட்டிய உனது வழி..
திரைத்துரையே உனது சர்கார்..
வரி விலக
குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தவர்கள் அல்ல.நாங்கள்
குறுக்கு வலியுடன் அமர்ந்து சம்பாதித்தவர்கள்..
கை நிறைய சம்பளம் என்பார்கள்..அதை விட
கழுத்து நிறைய கடன் இருக்கும்..
வேலைக்காக அலைந்து
நுழைவு அட்டை அணிந்து
மூளையை பிழிந்து
உடலிலே மெலிந்தவர்கள் நாங்கள்..
உடையில் வேறுபாடு
நடையில் மாறுபாடு
சம்பள ஏற்றத்திற்காக நாங்கள் படும் பாடு.
எங்கள் உழைப்பை மேல் அதிகாரிகள் திருடுவதே எங்கள் உண்மைப்பாடு...
கணினி ஒன்றே எங்கள் நிலைப்பாடு..
வேலை உத்திரவாதம் இல்லாத (IT) இந்த துறை நாய் படும் பாடு...
பொட்டு வைக்க மறக்காதே
நிலவு அங்கே குடிகொள்ளும்...
காதணி அணிய மறந்துவிடாதே
ஆழவிழுதுகள் அங்கே வளர்ந்துவிடும்..
முகப்பூச்சு பூசாமல் இருந்து விடாதே
பகலில் நிலவு வந்து விட்டது என எண்ணிவிடுவர்...
கடற்கரைக்கு சென்று விடாதே
திரும்பும் கடலைகள் உன்னை விரும்பி சுனாமி போல் சீறிவரும்...
காலணி அணிய மறவாதே
பூமி ஈர்ப்பு விசையால் ஈர்த்துவிடும்...
உதட்டுச்சாயம் பூச மறந்து விடாதே
தேன் எடுக்க வண்டுகள் படையெடுத்து விடும்..
எதையும் மறந்து விடாதே
எதையும் மறைத்து விடாதே
என்னையும் நீ மறந்து விடாதே...
- மதுரைவிசை
சிவப்பு நிற கம்பளி வரவேற்பும் பன்னீர் தெளித்த வரவேற்பும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் இங்கு உண்டு
பெண்களின் இதழ்
- மதுரைவிசை
நியூட்டனின் விதி தோற்றதடி உன் விழியில்...
எடிசனின் எரிசக்தி தோற்றதடி உன் எக்கசக்க அழகில்...
நீ நாணம் கொள்கையில்
வானம் உன் பெயரையே மெல்லுகின்றது....
சத்தம் போட்டு சொல்லுகின்றது மின்னல்களாக........
-மதுரைவிசை
முகப்பூச்சு பூசாமல்
புறம் பேச்சு பேசாமல் இருப்பார்.
அணிகலன் மீது ஆசை இருக்காது..
பனியன் கூட வாங்க காசு இருக்காது...
இருந்தாலும் வாங்க மனமிருக்காது....
அன்பிர்க்கு உடன் பட்டவன்..
உடன் பிறந்தவர்க்காக கடன் பட்டவன்...
குடும்பத்தினால் ஏழை
குடும்பத்திற்காக வேலை
குடும்பத்திடம் மட்டுமே இவன் கோழை
முன்னேறி விடுவோம் நாளை! என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும்..... என் தந்தை.