மறந்துவிடாதே

பொட்டு வைக்க மறக்காதே
நிலவு அங்கே குடிகொள்ளும்...
காதணி அணிய மறந்துவிடாதே
ஆழவிழுதுகள் அங்கே வளர்ந்துவிடும்..
முகப்பூச்சு பூசாமல் இருந்து விடாதே
பகலில் நிலவு வந்து விட்டது என எண்ணிவிடுவர்...
கடற்கரைக்கு சென்று விடாதே
திரும்பும் கடலைகள் உன்னை விரும்பி சுனாமி போல் சீறிவரும்...
காலணி அணிய மறவாதே
பூமி ஈர்ப்பு விசையால் ஈர்த்துவிடும்...
உதட்டுச்சாயம் பூச மறந்து விடாதே
தேன் எடுக்க வண்டுகள் படையெடுத்து விடும்..
எதையும் மறந்து விடாதே
எதையும் மறைத்து விடாதே
என்னையும் நீ மறந்து விடாதே...
- மதுரைவிசை

எழுதியவர் : மதுரைவிசை (23-Sep-21, 4:23 am)
சேர்த்தது : மதுரைவிசை
Tanglish : maranthuvidathe
பார்வை : 1634

மேலே