அப்பா

முகப்பூச்சு பூசாமல்
புறம் பேச்சு பேசாமல் இருப்பார்.
அணிகலன் மீது ஆசை இருக்காது..
பனியன் கூட வாங்க காசு இருக்காது...
இருந்தாலும் வாங்க மனமிருக்காது....
அன்பிர்க்கு உடன் பட்டவன்..
உடன் பிறந்தவர்க்காக கடன் பட்டவன்...
குடும்பத்தினால் ஏழை
குடும்பத்திற்காக வேலை
குடும்பத்திடம் மட்டுமே இவன் கோழை
முன்னேறி விடுவோம் நாளை! என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும்..... என் தந்தை.