பாரதியார் தீர்க்கதரிசி

வந்தே மாதரம் என்று
சொன்ன பாரதியே
உன்னை என்றும்
நினைக்கின்றோம்
இன்று வணங்குகின்றோம் ..!!

பாரதி நீ ஓர் தீர்க்கதரிசி புலவன்
நீ பாடாத பாட்டுக்கள் ஏது...?

பாப்பா பாட்டு, குருவி பாட்டு
கும்மிப்பாட்டு, கண்ணன் பாட்டு
நாட்டுப்பற்று பாடல்கள்
என்று வகை வகையான
பாட்டு பாடியுள்ளாய்...!!

எந்தையும் தாயும் கொஞ்சி மகிழ்ந்த
தாய் திரு நாட்டில் எல்லோருக்கும்
காணி நிலம் வேண்டும் என்று
பராசக்தியிடம் அன்று நீ கேட்டாய்

ஆனால்..!!
இன்று பராசக்தியே தன் நிலம்
எதுவென்று புரியாமல் முழிக்கிறாள் ..!!

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் இந்த அடிமையின்
மோகம் என்று
அன்று நீ பாடிய பாடலை
இன்றும் நாங்கள்
பாடிக்கொண்டுதான் இருக்கின்றோம்..!!

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றாய்
ஆனால் ...
இன்றும் நாட்டிலே ஜாதிகளின்
சதிராட்டம் ஓயவில்லை பாரதி ..!!

ஒரு விடயம் முடிந்து விட்டால்
அது மீண்டும் கிடைப்பது கடினம்
என்று சொன்ன பாரதியே..!!

உன் வார்த்தைகள் உண்மைதான்
உன்னை போல் ஓர் தீர்க்கதரிசி கவிஞன்
இன்னும் உலகத்தில் உதிக்கவில்லை..!!

அதனால் தான் வருடம்தோறும்
உன் நினைவு நாளில்
தப்பாமல் உன்னை நினைத்து
பாருக்குள்ளே நல்லநாடு
எங்கள் பாரத நாடு என்று
ஜெய பேரிகை மட்டுமே
கொட்டி வருகிறோம் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Sep-21, 8:45 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1038

மேலே