மகாகவி பாரதியார் நினைவு தினம்

விபத்துக்கு அச்சப்பட்டால்
வாகனம் ஓட்ட முடியாது
தேர்வு எழுத அச்சப்பட்டால்
வாழ்வில் நல்வழி அடைய முடியாது
கேள்வி கேட்க அச்சப்பட்டால்
பதில் இன்றி ஏமாற்றப்படுவோம்
பிரசவத்துக்கு அச்சப்பட்டால்
குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது
உழைக்க அச்சப்பட்டால்
வாழ்வில் உயர்வு பெற முடியாது
அநியாய அக்கிரமங்களை
தட்டி கேட்க அச்சப்பட்டால்
வன்முறைகளை தடுக்க முடியாது
நீதிபதி தீர்ப்பு சொல்ல அச்சப்பட்டால்
நீதியை நிலைநாட்ட முடியாது
உண்மை பேச அச்சப்பட்டால்
தவறுகளை தடுக்க முடியாது
ஒன்று மட்டும் மனதில் பதிய வையுங்கள்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அஞ்சியவனுக்கு தினம் தினம் சாவு
மகாகவி பாரதியின் கூற்று படி அச்சமில்லை
அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற
போதிலும் அச்சமில்லை
அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
என்று அச்சம் தவிர்ப்போம் அஞ்சாமல்
சிறப்புடன் வாழ்வோம் பாரதியின் கனவு
நிறைவேற இன்றைய அவரது
நினைவு நாளில் இருந்து முயல்வோம்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (11-Sep-21, 4:56 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 67

மேலே