ஐடி வேலை
குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தவர்கள் அல்ல.நாங்கள்
குறுக்கு வலியுடன் அமர்ந்து சம்பாதித்தவர்கள்..
கை நிறைய சம்பளம் என்பார்கள்..அதை விட
கழுத்து நிறைய கடன் இருக்கும்..
வேலைக்காக அலைந்து
நுழைவு அட்டை அணிந்து
மூளையை பிழிந்து
உடலிலே மெலிந்தவர்கள் நாங்கள்..
உடையில் வேறுபாடு
நடையில் மாறுபாடு
சம்பள ஏற்றத்திற்காக நாங்கள் படும் பாடு.
எங்கள் உழைப்பை மேல் அதிகாரிகள் திருடுவதே எங்கள் உண்மைப்பாடு...
கணினி ஒன்றே எங்கள் நிலைப்பாடு..
வேலை உத்திரவாதம் இல்லாத (IT) இந்த துறை நாய் படும் பாடு...