மனித மிருகங்கள்

அண்டத்தை படைத்த இறைவன்
மனித மிருகங்களை பாடைக்காது
இருந்திருக்கலாம்...

அண்டத்தை ஆள நினைத்து
அகிலத்தை அழிவின்
புதைகுழியில் தள்ளுகிறான்

ஆராய்ச்சி எனும் பெயரில்
உல்லாசமாக வாழ நினைத்து
உயிர்களை கொல்லும்
உயிர்க்கொல்லி மனிதன்

நஞ்சையும் புஞ்சையும்
நஞ்சாக மாற்றி விவசாயத்தில்
விஷத்தை கலந்தான் வஞ்சகன்

காற்றையும் நீரையும் விற்று
காசாக்கி ஆயுளை குறைத்து
வாழும் அற்ப மனிதர் கூட்டமிது

அண்டத்தை பிண்டமாக்க
துடிக்கும் அற்ப பதர்கள்
இம்மானிட மாமிச உண்ணிகள்

இயற்கையை வஞ்சிக்கும்
இதயமில்லா இனமானது
மனிதன் என்னும் பெயர்
கொண்ட மனிதமில்லா
கொடுரமிருகம் இவன்

எழுதியவர் : பிந்துஜா ராஜா (5-Oct-21, 10:08 pm)
சேர்த்தது : பிந்துஜா ராஜா
Tanglish : manitha mirukangal
பார்வை : 63

மேலே