நற்சொல்
நற்சொல்
🎶🎶🎶🎶
அனிவதற்கு இனியதாய்
ஆடைகளை வாங்கினோம்.
நடனத்தில் இனியதாய்
நாடிச்சென்று பார்க்கிறோம்.
சுவைகளில் இனியதாய்
தேடிச்சென்று சுவைக்கிறோம்
நட்புக்கு இனியரை
நன்பராக்கிக் கொள்கிறோம்
பயணத்திற்கு இனியதாய்
பாதை அமைத்துக் கொள்கிறோம்
கேட்டலுக்கு இனியதாய்
கீதங்களைத் தேர்கிறோம்
மனதிற்கு இனியதாய்
மகிழ்வை நாடிச் செல்கிறோம்
கலைகளிலும் இனியதாய்
கற்று நாமும் உயர்கிறோம்
நுகர்தலுக்கு இனியதாய்
திரவியங்கள் தெளிக்கிறோம்
சொற்களுக்குள் இனியதாய்
சொல்லக் கோடி கிடைக்கையில்
வன்சொல் வந்து
நாவினை
தன்வயப்படுத்தல் தடுக்கனும்
கண்மணி போன்ற மொழியிலே
கருவிழியாய் நாவு
இருக்கனும்
பன்பட்ட சொல்லை
சொல்லவே
பாம்பின் நாவாய்
நீளனும்
வன்சொல் மனதில் தோன்றிடின்
முதலை நாவாய்
அடங்கனும்
காயும் ஒருநாள்
கனிந்திடும்
வாய்ச்சொல் தவறிடின்
வடுப்பெறும்.....
📣📣📣📣📣📣📣🎙️🎙️🎙️🎙️