Sobi - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Sobi
இடம்:  Trichy
பிறந்த தேதி :  29-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Sep-2021
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  19

என்னைப் பற்றி...என் படைப்புகள்
Sobi செய்திகள்
Sobi - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2022 7:14 pm

அன்பே!, இந்த வலியை தாங்க முடியவில்லை,
வேறுவழி இல்லை,......
யாரையும் நம்ப முடியவில்லை,
ஏனெனில் ,சாதுவிற்கு பின்னாலும் வேஷம் !!!
உன்னிடம் எதிர்பார்க்க முடியாது ,
என்பதை நீயும் சொல்லிவிட்டாய்..
என் இயலாமையை இனி ,எங்கு தொலைப்பேன்??? .... ...
வெறுக்கவும் முடியவில்லை , என்பதால் வேலையை பார்க்கிறேன் ,.... இப்படிக்கு__________________

மேலும்

Sobi - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2022 8:38 pm

"புல்வெளி தேசத்தில் ஒப்பணைகள் இன்றி, நடந்தனவே நாடகங்கள். வீதியிலே"
"பயண சிறகுகள் நாற்காலிக்குள் முடங்கினவே"
"விடுகதை சொல்லவா வெடிகளை போடவா "
"தனித்திருக்க வேண்டாமே தகவல் உலகிலே"
" திசைகளின் நடுவிலே வீட்டிலே தரிசனம் வெளிவரும் நாள் தேடியே நாட்களும் நகருமோ "
"இலக்கிய செலவிலே இதயங்கள் பேசுதே யான் கண்ட மௌனமே தீண்டாதிரு என்னையே"
" சாவி வழியிலே சூரியன் வந்தது உலகினுள்ளே வீட்டினுள்ளே விடிந்தது நாளையே!"

மேலும்

Sobi - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2022 3:46 pm

தூரமாக செல்ல விரும்புகிறேன் என்னை தேடி என் தனிமையை இழந்த ஒன்றை தேடி மகிச்சியை தேடி அன்பை தேடி இறைவனை தேடி சரணடைய விரும்புகிறேன் அவனிடம் என்னை முழுமையாக என்னை ஏற்று கொள்வாய் இறைவா உன்னிடமே என்னை தொலைக்க இடம் கொடுப்பாய்

மேலும்

Sobi - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2021 8:58 am

..."

"கை தேர்ந்த ஏமாந்த சில நிமிடங்களில் தான் உணர்ந்தேன் என்னை, பிறக்க விரும்பா இவ்வுலகில் வாழ்கிறேன் என்று "...!!!

மேலும்

Sobi - சபியா காதர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2016 10:50 am

நீயும் நானும்
எந்தப் புள்ளியில்
ஒன்றித்துப் போவோம் எனத்
தெரியவில்லை
நீ ஷேகுவராவை பற்றிப்
பேசுகையில்
நான் பிக்காஸோவைப்
பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பேன்

நான் நம்
குடும்பச் சிக்கல்களுக்கு
விடை தேடிக் கொண்டிருக்கையில்
நீ
உலக அரசியலின்
காய் நகர்த்தல்களை
விமர்சித்துக் கொண்டிருப்பாய்
உன்னால் மட்டுமே
பௌர்ணமி பரவிய
கடல் இரவில்
கெபிடலிஸ்ம் பற்றியும்
லிபரல் வாதத்தையும்
எனக்கு
விளங்க வைக்க முடியும்
முன்பெல்லாம்
என் கவலைகள்
இரண்டு மாதமாய் நீரூற்றும்
ரோஜாச் செடி
ஏன் பூக்கவில்லை
என்பதோடு நின்றுவிடும்
ஆனால் இப்போது
அதைத் தாண்டிய உலகம்
காட்டியிருக்கிறாய்
என் மூளை மடிப்புக்

மேலும்

இந்த கவிதை நிஜ உலகின் வரிகள் ,வாழ்வின் மாற்ற இயலாத நிலைகள் சில பொதிக்கப்பட்டு உள்ளது கவிதை வரிகளில் 09-Oct-2021 5:58 pm
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் 22-Sep-2016 10:30 pm
இனிமையான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 1:17 pm
அருமை தோழி அற்புதமான படைப்பு .வாழ்த்துக்கள் 21-Sep-2016 11:40 am
Sobi - சபியா காதர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2016 9:53 pm

திருமண அமைப்பு முறைதான் எத்தனை வித்தியாசமானது. சில எதிர்த் துருவங்களும், ஒத்த துருவங்களும் கூடவே ஒத்துப் போகும் துருவங்களும் திருமணத்துக்குள் பிணைக்கப் பட்டு விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் மனைவியின் ஈர்ப்பும் சுவாரஷ்யங்களும் தொட்டுக் கொள்ளும் சங்கேத பாஷைகளும் தீர்ந்த பின் மீதமுள்ள வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதுதான் என்னவாக இருக்கும்? ஆனாலும் அவர்களிடத்தில் பேசித் தீர்க்க தினமும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அக்கறை, புரிந்துணர்வு, சக தர்மம், கூடவே பெறவும் கொடுக்கவுமான நேசம். ஒரு பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான் என்னவாக இருக்கும்? மரியாதை.  எப்போதும் எந்த நிலையிலும் நான் உன்னை கண்ணியப

மேலும்

இந்த கவிதையை எனது what's up status ல வைக்க ஆசை படுகிறேன் அதை பார்க்கும் அனைத்து ஆண்களுக்கும் தெரிய வேண்டும் 09-Oct-2021 5:43 pm
உண்மை இதை உலகில் உள்ள அனைத்து ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கவிதையை எல்லா இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும் ... 09-Oct-2021 5:35 pm
Sobi - சபியா காதர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 9:53 pm

திருமண அமைப்பு முறைதான் எத்தனை வித்தியாசமானது. சில எதிர்த் துருவங்களும், ஒத்த துருவங்களும் கூடவே ஒத்துப் போகும் துருவங்களும் திருமணத்துக்குள் பிணைக்கப் பட்டு விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் மனைவியின் ஈர்ப்பும் சுவாரஷ்யங்களும் தொட்டுக் கொள்ளும் சங்கேத பாஷைகளும் தீர்ந்த பின் மீதமுள்ள வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதுதான் என்னவாக இருக்கும்? ஆனாலும் அவர்களிடத்தில் பேசித் தீர்க்க தினமும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அக்கறை, புரிந்துணர்வு, சக தர்மம், கூடவே பெறவும் கொடுக்கவுமான நேசம். ஒரு பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான் என்னவாக இருக்கும்? மரியாதை.  எப்போதும் எந்த நிலையிலும் நான் உன்னை கண்ணியப

மேலும்

இந்த கவிதையை எனது what's up status ல வைக்க ஆசை படுகிறேன் அதை பார்க்கும் அனைத்து ஆண்களுக்கும் தெரிய வேண்டும் 09-Oct-2021 5:43 pm
உண்மை இதை உலகில் உள்ள அனைத்து ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கவிதையை எல்லா இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும் ... 09-Oct-2021 5:35 pm
Sobi - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
அருமையாக உள்ளது அம்மா என்றாலே அன்பு 30-Nov-2021 3:53 pm
அற்புதம் அன்னை என்ற தெய்வத்தை நல்ல படியா வாழ வைக்க வேண்டும் ... என்ன பண்ணினா தாயார் நல்ல இருப்பங்களோ . அதுவாக ஆகிறாய்.. என்ன என்னவோ விருதுகள் உள்ளது உலகில் உன்னை விட சிறந்தது எதுவும் இல்லை தாயே 01-Oct-2021 12:18 am
நன்று 30-Jun-2021 8:42 pm
Sobi - மதுரைவிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2021 4:23 am

பொட்டு வைக்க மறக்காதே
நிலவு அங்கே குடிகொள்ளும்...
காதணி அணிய மறந்துவிடாதே
ஆழவிழுதுகள் அங்கே வளர்ந்துவிடும்..
முகப்பூச்சு பூசாமல் இருந்து விடாதே
பகலில் நிலவு வந்து விட்டது என எண்ணிவிடுவர்...
கடற்கரைக்கு சென்று விடாதே
திரும்பும் கடலைகள் உன்னை விரும்பி சுனாமி போல் சீறிவரும்...
காலணி அணிய மறவாதே
பூமி ஈர்ப்பு விசையால் ஈர்த்துவிடும்...
உதட்டுச்சாயம் பூச மறந்து விடாதே
தேன் எடுக்க வண்டுகள் படையெடுத்து விடும்..
எதையும் மறந்து விடாதே
எதையும் மறைத்து விடாதே
என்னையும் நீ மறந்து விடாதே...
- மதுரைவிசை

மேலும்

நன்றி... 30-Sep-2021 11:34 pm
👌👌👌 30-Sep-2021 4:42 pm
Sobi - Sobi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2021 9:49 pm

எனக்கு கவிதைகள் சொல்வோரை பிடிக்கிறது - ஏனெனில் இங்கு கவிதைகளாக யாருமில்லை

மேலும்

தாங்கள் சொல்ல வந்தது எனக்கு பிடிக்காது இருந்தாலும் தங்கள் கருத்தில் மிகவும் பிழை உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது எனவே தாங்கள் கபிலர் என்ற முறையில் தங்களின் கருத்து சிறந்ததா என்று ஆய்ந்து பதில் கூறுங்கள் 29-Sep-2021 11:16 pm
மேலும்...
கருத்துகள்

மேலே