காதல் காந்தம்
கன்னியர்களின்
கடைக்கண் பார்வை
காளையர்களின் மீது
வீழ்ந்து விட்டால்
காதல் என்னும் காந்த சக்தி
மனதில் வந்து
ஒட்டிக்கொள்ளும் ...!!
காளையர்களின் மனதில்
காதல் பிறந்து விட்டால்
கட்டுக்கு அடங்காத
காற்றாற்று வெள்ளத்தை
கை கொண்டு
தடுத்திடும் சக்தியும்
மலையை மடுவாக
நினைத்து
புரட்டிப்போடும் திறமையும்
தனக்குள் இருக்கு என்ற
நினைப்பும் காளையர்களின்
மனதில் தோன்றிவிடும் ...!!
--கோவை சுபா