குருவே தெய்வம்
" நல்ல மாணவன், மிக நல்ல மாணவன்! யார் தான் அந்த நல்ல மாணவன் ?
அறிவின் பிம்பம் பிரதிபலிக்கும் கண்ணாடி ஆனவன். தெளிவு தேடி வருவோர்க்கெல்லாம் முன்னோடி ஆனவன். எவனோ, அவனே நல்ல மாணவன்.
காலம் முழுவதும் கற்பி என
கடவுள் படைத்து வைத்த
'ஆசிரியர்' எனும் சிற்பி,
பற்று கொண்டு செதுக்கி
வைத்த சிலையானவன்,
கற்று வரும் கலைக்கெல்லாம்
தலைவன் ஆனவன், எவனோ அவனே நல்ல மாணவன் .
குற்றமற்ற கல்வியை கற்று,
கற்றவற்றை வாழ்விலே விட்டு ,
மற்ற எல்லா வளங்களையும் பெற்று ,
வெற்றி அது விடமல் உரசும் பொன்னாக,
கற்று வந்த பள்ளிக்கு கண்ணாக ,
இருப்பவன் எவனோ அவனே
நல்ல மாணவன்.
அத்தகைய நல்ல மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களையும் பள்ளிகளையும் நினைத்து வணங்க வேண்டிய நாள் இன்று, 'ஆசிரியர் தின திருநாள் ' இன்று.
இந்நன்னாளில் எல்லா ஆசிரியர்களையும், இந்நாள் உருவாக காரணமாய் திகழ்ந்த 'டாக்டர் திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்' அவர்களையும் நினைத்து நினைத்து வணங்குவோம்.