கடல்நண்டுக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

குன்மவலி வாதங் கொடுங்கரப்பான் உண்டாக்குஞ்
சன்மச் சொறியைத் தருவிக்கும் - பின்னும்
உதிரக் கழிச்ச(ல்)தனை ஓங்குவிக்கு மாதே
அதிரக் கடல்நண் டது

- பதார்த்த குண சிந்தாமணி

இது வயிற்று நோய் வாத நோய், கடுவன், சொறி, இரத்தகிராணி இவற்றை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-21, 6:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே