வயல் நண்டுக்கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வயலிலுறு நண்டருந்த வாதக் குடைச்சல்
அயலினுமி ருக்கா(து) அணங்கே - துயிலவொட்டா
வன்சயித்தி யங்கரப்பன் மன்குடலி ரைச்சலும்போம்
முன்பயித்தி யங்கதிக்கு முன்

- பதார்த்த குண சிந்தாமணி

இக்கறி வாதக் குடைச்சல், கரப்பான், சயித்தியம் இவற்றை நீக்கி குடல் இரைச்சல், பித்தத்தைப் பெருக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-21, 6:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே