காதல் தலைவியின் நம்பிக்கை

காதல் தலைவியின் நம்பிக்கை
*******
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிவு அறியிலரே;
தாமரைத் தண் ஊதி, மீமிசைச் சாந்தில்
தொடுத்த தீம் தேன் போல, புரைய
மன்ற, புரையோர் கேண்மை,
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுவரோ? செப்பு அறியிலரே

(நற்றிணை பாடல் = தலைவி கூற்று, தலைவி
தோழியிடம் )
பொருள் :--
என் காதலர் சொன்ன சொல் காப்பவர். எப்போதும் இனியவர். என்றும் என்தோளினை பிரியாதவர்.

குளிர் தாமரையின் தாதுக்களை ஊதி உயர்ந்த
மலையிலுள்ள சந்தன மரத்தில் வண்டு சேர்த்த
தித்தித்த தேன் போல உயர்ந்தது அவர் காதல்

நீர் இல்லாமல் உலகமில்லை. அவர் இலாமல்
நானில்லை. விரும்பி நேசிக்கிறார்.

என் நெற்றியில் படரும் பிரிவுத் துயர் (பசலை)
பார்த்து பயப்படுவார்

தான் செய்வதை உணராது எனைப் பிரிந்து
சிறுமை அடைவாரோ?

(யாப்பு அறியாதவன் இயல்பு வரிகள்)
கீழ்க்கண்டவாறு
*******
தலைவன் நல்லவரெ னைமறப் பவரல்லர்
நிலைமாறா தன்புளங் கொண்ட இனியவர்
கலைஞர் கவிஞரெ ன்தோளுக் கிணையவர்
அலைகடல் சூழினுமென் பிரிவு தாங்கார்

வண்ணமலர் கெஞ்சலில் தாதூதும் வண்டு
தன்னல மில்லாத பரநோக்குப் பார்வையில்
அண்ணாந்த மேட்டிசைக் கந்தமரத் தூளியிடை
இன்சுவைத் தேனடையா யுயர்ததவர் காதல்

என்நுதற் படரும் பசலைக் கஞ்சுவர்
கண்போல் நேசிப்பரென் கண்கள வரிடம்
தண்ணின்றி உலகிலை அவர் உலகம்
என்னைப் பிரிவரோ சிறுமை அடைவரோ?

(யாப்பு சார்பின்றி அமைந்திருப்பினும்
படிக்க சுவையிருப்பின் மகிழ்ச்சி)

எழுதியவர் : சக்கரை வாசன் (6-Sep-21, 7:13 pm)
பார்வை : 56

மேலே