பரணி சுப சேகரின் காலை வணக்கம்விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து கவிஞர் இரா இரவி

பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம்
மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து .

கவிஞர் இரா. இரவி

தினந்தோறும் மரபுப்பாவால் வணக்கம் சொல்லி
தித்திக்கும் தமிழின் பெருமையை பறைசாற்றி வருகின்றார்!
காலையில் சூரியன் வருகிறதோ வரவில்லையோ
கவி வந்துவிடும் பரணி சுப. சேகரின் வாழ்த்து வரும்
பரணி பாடி புதுத்தெம்பு தந்து வருகின்றார்
பல்வேறு புலனக்குழுக்களில் பதிந்து வருகின்றார்
படித்த அனைவருமே பாராட்டி வருகின்றனர்
பாவேந்தர் போல தினமும் பாட்டுக்கட்டி வருகின்றார்
தமிழன்னை இவரிடம் தினமும் வந்து கெஞ்சுகின்றது
தமிழால் தவறாமல் தினமும் பாடு என்றே!
சொற்கள் வந்து வரிசையில் நிற்கின்றன இவரிடம்
சொக்கவைக்கும் வரிகளால் அசத்தி வருகிறார்!
சொல் விளையாட்டு விளையாடி வியப்பைத் தருகிறார்
சொற்களஞ்சியமாக நாளும் நற்சொற்கள் தருகிறார்!
என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில் நாளும்
ஏன் கைஏந்த வேண்டும் பிறமொழியில் மெய்ப்பித்து வருகிறார்
எல்லாவளமும் உள்ள மொழி நம் தமிழ்மொழி
எந்நாளும் வந்து விடுகின்றன புதிய சொற்கள்
காலையில் படித்தவுடன் மனம் மகிழ்கின்றது
காலை மாலை இரவு மூன்று வேளையும் படித்து மகிழ்கிறேன்
தமிழ்போல நிலைத்து நீ வாழ்க பல்லாண்டு
தமிழ்ப்பணி தொய்வின்றி தொடர்ந்திட வாழ்த்துகள்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (7-Sep-21, 8:17 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 30

மேலே