புழுகுசம்பா அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

புழுகுசம் பாஅரிசி பூதலத்தில் உண்பார்க்(கு)
அழகுமொளி யுஞ்சேர்வ தன்றி - அழலாம்
பசிதாகந் தீரும் பலமுமிக உண்டாம்
முசிவே துடற்சுகமா முன்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனை யுண்டால் அழகு, காந்தி, மிகுந்த பசி, பலம் இவற்றை உண்டாக்கும்; தாகத்தைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-21, 11:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே