கைவரைச் சம்பா அரிசி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கைவரைச்சம் பாஅரிசி கண்டால் அவரவர்தம்
மெய்வரையாம் என்றும் மிகுபலமாம் - மையல்
அடையாதென் பார்கள் அடர்சுக் கிலமும்
உடையா ததிசுகமாம் ஓது
- பதார்த்த குண சிந்தாமணி
இக்கைவரைச் சம்பா அரிசியினால் உடற்கு நல்ல வலிமை, சுக்கிலம் கட்டல் இவை உண்டாகும்; பித்தம் இல்லை