சிலைவைக்கின்றாராம்
சிலை யாருக்கு
விளம் விளம் மா கூவிளகாய்
சிலையுடை இராமரின் சிலையை தெய்வமென்றார்
கலைதலை பலசிலை வணங்கி தெய்வமென்றார்
சிலையதை பாட்டிலுக்கு வைக்க பொறுக்காதே
சிலைதலை இரண்டெனப் பெரியார். வைக்கமதே
சிலை. =. வில். சிலை. =. உலோக,/கற்சிலை
தலை. =. இடம் ஊர். தேசம். நாடு
வில்லுடைய இராமனுக்கு சிலை வைத்து தெய்வமாக வணங்கினோம்.
கலை செய்த பாரதியாம் வாணிக்கும் பல தெய்வங்களுக்கும்சிலை வைத்து
வணங்கினோம். துண்டு துண்டு துண்டாக சிதறி இருந்த பாரதத்தை ஒன்று
சேர்த்துபெரிய இந்தியாவாக்கிப் பார்த்த சர்தார் வல்லபாய் பாட்டீலுக்கு
சிலைவைத்ததை சிலருக்குப் பொறுக்கவில்லை.
வைக்கத்தில் போராட்டம் கேரளாக்காரன் தலைமையில் பல நாட்கள் நடந்ததது
அவர்கள் யாரும் வைக்கம் வீரராகவில்லை. . பெரியாரிடம் சாப்பிட்ட கும்பல்
அவருக்கு செஞ்சோற்றுக் கடனாக அவருக்கு சிலைவைத்து மாலை பொட்டு
பெரியார் சொத்துக்கு செலவு கணக்கு காட்டி வருகிறது. அன்று வைக்கம் இன்று சிலையோ
நாட்டை துண்டாக்கிஒற்றுமை குலைத்தும் மதக்குழப்பம் , ஜாதி வெறியை
தூண்டிவிட்டு வெள்ளையனுக்கு ஆதரவாய் இருந்த பெரியாருக்கு சிலை வைக்கவா
இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இதை நாடு ஏற்குமா தெய்வந்தான் பொறுக்குமோ
என்கிறார்கள் பொதுமக்கள்.