மணி ஹெய்ஸ்ட்

Money heist
👀👀👀👀👀

"நாம்
பேசக்கூடாது...
நம் மூளை தான்
பேச வேண்டும்..."

இதுதான் டைரக்டர் சொல்ல வருவது.

2017ல் ஆரம்பித்த,
ஸ்பானிஷ் வெப்-சீரிஸ்.

தமிழில் மணி ஹெய்ஸ்ட் என்ற பெயரில் டப் செய்யப்பட்டிருக்கிறது.

இது வரை 5 சீசன். 5 வந்து சீசனில் 5 எபிசோட் வந்திருக்கிறது...

கதை:

கதை என்று பார்த்தால், ஒரே வரி கதை தான்....

"வரலாறு காணாத பெரிய அளவில் ஒரு வங்கி கொள்ளை"

ஆனால்,
படமாக்கப்பட்ட விதமும், சொல்லப்பட்டுள்ள புதிர் விளையாட்டுகளும்
அடடா...
செம...
என்று சொல்ல வைக்கிறது...

ஒரு மாஸ்டர் மைண்ட் கொண்ட professor,
தனித்திறமை கொண்ட 8 பேர்,

பெர்லின்
டோக்கியோ
ரியோ
மாஸ்கோ
டென்வர்
ஹெய்ஸன்கி
ஓஸ்லோ
நைரோபி....

இந்த 8 பேரைக் கொண்டு, போலீஸை கதற விடுகிறார் professor.

ஆரம்பித்த முதல் இரண்டு நிமிடங்களிலிலேயே
சுவாரஸ்யம் கூடி விடுகிறது.

வங்கிக்குள் சென்று கொள்ளையடிப்பது அந்த 8 பேர் தான்.

ஆனால் படத்தின் ஹீரோ professor தான்.

5 மாதங்கள். பயிற்சி கொடுத்து கொள்ளையடிக்க.அனுப்புகிறார். திட்டம் எல்லாம் அவருடைய மூளை. 8 பேரும் செயல்படுத்துகிறார்கள்.

சிசிடிவி கேமரா மூலம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் பேராசிரியர்.

இவருடைய மூளையை கண்டு அசந்து போய், இதை கையாளும் போலீஸ்காரியே மயங்கி பேராசிரியரை திருமணம் செய்து கொள்கிறாள்‌‌.

எப்பொழுதும்,
புரபெசர் ஒரு திட்டத்தை உருவாக்கும் போதே அதற்கு மாற்று திட்டத்தையும் உருவாக்கி வைத்திருப்பார்.

நாம்
திட்டத்தை
உருவாக்குவது
எளிது.
ஆனால்
அதை செயல்படுத்தும் போது
எதிராளி
எப்படி ரியாக்ட் பண்ணுவான்
என்று
நமக்கு தெரியாது.

அது தான் பிரச்சினை.
எதிராளி எப்படி ரியாக்ட் பண்ணுவான் என்று கணித்து திட்டமிட வேண்டும்,
அல்லது,
எதிராளி ரியாக்ட் செய்த உடன்
திட்டத்தை உடனே அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும்..

இதை அட்டகாசமாக செய்திருப்பார் புரபெஸர்.

ச்சே...
இந்த மாதிரி ஒரு புரபெஸர் நமக்கு இல்லையே
என்ற ஏக்கம் எழுவதை தவிர்க்க முடியாது
படம் முடியும் போது....

யூ ட்யூப்பில்
இந்த கதையை தமிழில் விளக்கியுள்ளார் ஒருவர், அதுவும் ஒவ்வொரு எபிசோடாக. படம் பார்க்கும் முன் அதை பார்த்து விடுங்கள்
கதை அருமையாக புரியும்.....



✍️கவிதைக்காரன்

எழுதியவர் : (8-Sep-21, 7:58 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 51

மேலே