மதியிழந்த முத்துக்கள்
விழித்திருக்கும் வேளையிலேயே
விழித்திரையில் காண்கையிலேயே
உன் செவிதனில் மலர்சுற்றும்
துஷ்டனைக் கண்டு தூரவிலகாமல்
அவன் விழியோடு விழிகோர்த்து
முத்துப் பற்களை காட்டும்,
மதியிழந்த உன்தன் முத்துக்களை
தட்டி எடுத்தால்தான் என்ன?

