பொண்ணு பாக்க போறேன்

ஆம்.. வயது முப்பதை தாண்டி விட்டது.
காதலிகளும் பிள்ளைகளைப் பாலர் பள்ளியில் சேர்க்கத் தொடங்கி விட்டனர்...

எனது 32 வயதிற்குள் திருமணம் செய்யவில்லையேல் என்றும் திருமணம் வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்.
அடுத்த வருடம் 32 ஆகிவிடும்.

ஏதோ அம்மாவின் தோழியர் ஒருவருக்குத் தெரிந்தவராம். பெண் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை. முதல் முறையே சரியாக வேண்டும் என முடிவு செய்து விட்டேன். தாடிய 'shave' பண்ணுடா என அம்மா ஒரே நச்சரிப்பு. திருவள்ளுவர் ஏன் ஆண்கள், சிங்கம் போல் தாடி, மீசை, நீண்ட முடி வைத்திருக்க வேண்டும் என ஒரு குறல் எழுதியிருக்கலாம். பல தடவை வேண்டியிருக்கேன். உண்மையில் ஆணுக்குத்தான் உடைகளில் கெடுபிடி.
ஏதோ முடிந்த மட்டும் என்னால் நல்ல தோற்றத்துடன் செல்ல முயன்றேன். அம்மாவிற்கும் , பொண்ணுக்கும் மல்லிகை வாங்க வீட்டின் அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலின் முன் உள்ள பூக்கடைக்குச் சென்றேன்.
நல்ல ஒல்லிய உடலாய் பாட்டி ஒருவர் பூக்களை மாலையாய் பிண்ணியிருந்தாள். வாடிக்கையாகச் செல்லும் கடைதான்.
" பாட்டி, மல்லிகை 10 முலம் கொடுங்க " என்றேன்.

" என்னப்பா? அதிகமா வாங்குற? " என்றாள் பாட்டி.

" பொண்ணு பாக்க போறன் , அதான் பொண்ணுக்கும் சேர்த்து " என்று இழுத்தேன்...

மௌனமாக பாட்டி விரைவாக தொடர்ந்து மாலையைத் தொடுத்தாள். பாட்டியின் வாய்கள் எதையோ சொல்ல துடித்தது.
மாலையை ஓரமாக வைத்துவிட்டு...மல்லைகைப் பந்தை எடுத்து அளந்தாள்.
காற்றில், மாட்டிய மாலைகள் ஆடிட, அதில் இருக்கும் ரோஜாக்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. முகம் தெரியாத அந்தப் பெண்ணின் முகத்தை காணாது கனவில் பறந்தேன்.

" எந்த ஊரு பொண்ணுப்பா ?, நல்ல படியா முடியனும். கல்யாணத்துக்கு நல்ல மாலையா கட்டி தரேன் " என்றாள் பாட்டி.

" பாட்டி, பொண்ணுக்கு ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமா, சமைக்கத் தெரியுமானு உங்கள பொண்ணு பார்க்க வந்தப்ப கேட்டாங்களா?" என்று பாட்டியின் வெக்கத்தை நான் அழைக்க....

"அதுலாம் தெரியும். எப்படித் தெரியாம வாக்கப் பட போறது ?" என என்னை கேட்க...

சிரித்த நிலையில் சிலையானேன்....

" முதல்ல ஏன் ஒரு பொண்ணுக்கு இது மூனும் தெரியனும்னு தெரிஞ்சுக்கோ " என்றாள்.

" இப்பலாம் இத கேட்ட , நம்பல கேவளமா பார்ப்பாங்க, பாட்டி " என்றேன்.

" பாடும் பொண்ணு குரல் கெடாம இருக்க கத்த மாட்டாள், ஆட தெரிஞ்சவ சுறுசுறுப்பாக வீட்டுள இருப்பா. என்னோட சாப்பாட்டுக்கே என்னோட வீட்டுக்காரரு வெளியே சாப்பிட மாட்டாரு. அவரோட விருப்பத்த தெரிஞ்சு பக்குவமா சமைப்பேன். நல்லா சமைக்கிற ஒருத்திக்கு விவாகர்த்து நடக்காது. அந்த சாப்பாட்டில் பல சண்டைகள் சமாதானம் ஆயிருக்கு. இப்ப.... கல்யாணம் வேண்டாம் பிள்ளைகள் வேண்டாம்னு சொல்லிக்குறாங்க...." பாட்டியின் வாதம் புதியதாய் பூத்த பூவாயினும் அதே மல்லைகை வாசம்...

பத்து முலம் மல்லைகையுடன் ஒரு ஒத்த ரோஜாவை இனமாகத் தந்தாள் அந்த பாட்டி. இதெ கொடு. அவ சிரிப்பாள் என பாட்டி சொல்ல....

முகம் தெரியாத அவளை காதலிக்க ....
கல்யாண மாலைகளின் பூக்கள் மொட்டாகி விட்டன....

நன்றி
#siven19
பொண்ணு பார்க்க போறேன்.

எழுதியவர் : Siven19 (8-Sep-21, 8:22 pm)
சேர்த்தது : siven19
Tanglish : ponnu paakka poren
பார்வை : 178

சிறந்த கவிதைகள்

மேலே