பச்சோந்திகள்

பச்சோந்திகள்


என்னுடைய கண்ணீர்
மேகத்தின் கண்ணீருடன்
கலந்து கரைந்து கொண்டிருந்தது.
குட்டி சுவற்றின் மறைவில்
குளிரின் நடுக்கத்தில்
ஐயப்பன் போல்
குதிகாலிட்டு நான்
உட்கார்ந்திருக்க
மழைக்கு ஒதுங்கிய
காக்காவுக்கு
என் தலை கக்கூஸ் ஆனது.
ஆண்டவா! ஏன் என்னை
படைத்தாய்.
சாமியாவது, பூதமாவது
அப்பனும், ஆத்தாலும்
ஆசைப்பட்டதின்
விளைவே நான்.
டேய் தகப்பா!
ஆணுறையின் அருமை
தெரியாதவனே.
அன்று உறை போட
மறந்ததால்
தெருவுக்கு ஒருவராக
பன்னிகுட்டி போல்
ஐந்து பேரும்
தரித்திரத்தின்
தத்துபிள்ளைகளாக
தற்குறிகளாக
திரிகிறோம்.
சாராயத்தின்
சகவாசம்
உன்னை சவகுழியில்
தள்ளியது.
வறுமையின் கோரப்பிடியில்
காச நோயின்
வாசம்
கட்டுகடங்காமல்
போக
டி.பி. ஆஸ்பத்திரியில்
என் தாய் உயிருக்கு போராட்டம்.
ஏழையிலும் ஏழை
என் நிலைமை.
இருந்த ஓட்டல்
சர்வர் வேலையும்
என் கோபத்தின்
காரணமாக
பறிப்போகப்போகிறது.
ஏழைக்கு ரோஷம், மானம்
இருக்க கூடாதா?
அது என்ன பணக்காரனுக்கு
மட்டும் சொந்தமா?
அப்படி என் தவறு செய்தேன்
ஓட்டல் முதலாளி
எதிரில் அடுக்களையில்
சாப்பிட்டது ஒரு தவறா...
வியாபார நேரத்தில்
உனக்கு சாப்பாடு ஒரு கேடா...
தரித்திரம்.. தரித்திரம்...
தட்டி விட்டான் சாப்பாட்டு
தட்டை.
தகாத வார்தைகளால்
திட்டினான்.
கோபம் வந்தது பொறுத்து
கொண்டேன்.
கன்னத்தில் அறைவிட்டான்.
கால் வயிற்று கஞ்சிக்காக
அதையும் பொறுத்து
கொண்டேன்.
அவ்சாரி பிள்ளை என்றான்.
அவ்வளவு தான்...
ஜல்லி கரண்டி எடுத்தேன்
மண்டையில் ஒரே போடு.
அப்புறமென்ன.....
போலீசுக்கு பயந்து
கடற்கரையோரம்
கடல் அரிப்புக்கு
பலியான பழைய
கலையிழந்த கட்டிடத்தில்
தலைமறைவு.
இது சமூக விரோதிகளின்
கூடாரம்.
எங்கு பார்த்தாலும்
சாராய காலி பாட்டில்கள்.
அசுத்தத்தின் பிறப்பிடம்.
குட்டிசுவர்களின் குவியல்.
சொறி நாய்கள் தங்குமிடம்.
இது சரிவராது.
அவன் இந்நேரம் செத்து இருப்பான்.
போலீசுக்கு என்னை பிடிப்பது
ஒரு சிரமமா.
இனி விலங்கு தான்
ஜெயில் தான்.
கம்பி எண்ண வேண்டியது தான்.
இனி எப்போதும் களிச்சோறு தான்.

வாழ்க்கையின் விளிம்பில் நான்.
சோகத்தின் உச்சியில் நான்.
விரக்தியின் உயரத்தில் நான்.
காலம் செய்த கோலம்,
விதி செய்த சதி,
கடற்கரை ஓரம்
தளர்ந்த நடையுடன்
கடலை நோக்கி....
அலைகளுக்கு இடையே
ஆயுளை முடித்து கொள்ள
முடிவு செய்துவிட்டேன்.
சுயமரியாதை இழந்து,
தன்மானம் இழந்து,
வாழும் வாழ்க்கை
ஒரு வாழ்க்கையா.
மரணமே உன்னை முத்தமிடுகிறேன்.
கட்டி அணைத்து விடு.
என் மூச்சை நிறுத்திவிடு.
என் கதையை முடித்துவிடு.
அலைகள் அலேக்காக
அலைகழிக்க தொடங்கியது.
மரணத்தின் மணி
ஒலிக்க தொடங்கியது.
" டேய் வேணாண்டா"
" டேய் வேணான்டா"
அவள் கத்தியது காலன்
காதுகளுக்கு கேட்க
தற்கொலை முயற்சி
தோல்வி அடைந்தது.
வேகமாக அடித்த அலை
அவனை கரையோரம்
வீசியது.
" என்ன வேலை செய்யுற"
" என்னை ஏன் காப்பாத்தற"
" பயந்தாங்கொள்ளி, அவன் ஒன்னும் சாகல"
" நல்லாயிருக்கானா"
" அவனா சாவான், இன்னும் எத்தனை பேர் உயிரை அவன் எடுப்பானோ"
" அப்ப அவன் போலீசுக்கு போகலையா"
" பயந்தாங்கொள்ளி, பயந்தாங்கொள்ளி, போலீசாவாது, புண்ணாக்காவது"
" உண்மையாவா"
" என் தலை மேல் சத்தியிமா"
" அப்ப நான் இனி சாக வேண்டாமா"
" மகராசனா வாழனும்"
" நீ என்ன சொல்ற புள்ள"
" டேய் நீ சர்வர் வேலை செய்யும் போது"
" வேலை செய்யும் போது"
" நான் பத்து பாத்திரம் துலக்கும் போது"
" துலக்கும் போது"
" என்னை சைட் அடச்சது"
" நானா, உன்னையா"
" டெய், சைட் அடிக்கல"
" ஆமா, சைட் அடிச்சேன்"
" எதுக்கு சைட் அடிச்ச"
" அது தெரியல"
" உண்மையிலேயே தெரியில"
" தெரியில"
" அப்ப, அந்த கடல்ல போய் சாவுடா"
" நீ என்ன சொல்ற"
" டேய் உன்னை நான்..."
" என்னையா...நான் ஒன்னுத்துக்கும் உதவாதவன்"
" நீ ஆஞ்சநேயர் மாதிரி"
" நீ சொல்றது புரியில"
" உன் பலம் உனக்கு தெரியில"
" என்னை நம்பி நீ..."
" தள்ளு வண்டியில டிபன் கடை
ஆரம்பிப்போம்"
" அதுக்கு காசு"
" தண்டலுக்கு வாங்குவோம்"
" திரும்ப கட்ட முடியுமா"
" திருடல, அல்லலே, திருப்தியா
உழைப்போம், திருப்பம் நிச்சயம் வரும்"
" சரி வருமா"
" சரித்தரம் படைச்சவங்க
எல்லாம் சாதாரணமானவங்க தான்"
" நீ சொல்றது எனக்கு புரியல"
" அப்ப நீ பணக்காரனா ஆயிடுவ"
" நீ பேசறது ஒன்னுமே புரியல"
" அதான் சொன்னேனே அறிவுக்கும், பணத்தும் சம்மந்தம் இல்லைன்னு"
" புள்ள என்னை ஏன் காப்பாத்தின"
" டேய், இன்னுமா என் மேல சந்தேகம்"
" காதல் மட்டும் தான் நீ என்னை காப்பாத்த காரணமா"
" லூசு, மரணம் நம்முடைய நிழல் மாதிரி, அது தொடர்ந்து கொண்டே இருக்கும்,
அது எப்ப, எப்படி தாக்கும், யாருக்குமே தெரியாது"
" அதனால"
" எப்ப வரும்னு தெரியாத மரணத்தை பற்றி நம்ம ஏன் கவலைபடனும்"
" நான் செய்தது தப்பா"
" மிகப்பெரிய தப்பு"
" மன்னிச்சுடு"
" லூசு, வாழ்க்கையின் தத்தவம் தெரியுமா"
" தெரியாது"
" எனக்கு முத்தம் கொடு"
" எனக்கு வெக்கமா இருக்கு"
" டேய் உன் எதிர்கால பெண்டாட்டி கேட்கிறேன், முத்தம் கொடுடா"
" வாழ்க்கையின் தத்துவம்..."
"  முதல்ல முத்தம் கொடு, லூசு ... அப்புறம் சொல்றேன்"
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா......."
" இப்ப முத்தம் கொடுத்த இல்ல"
" ஆமா"
" இந்த நொடி தான் உண்மை"
" அடுத்த நொடி நமக்கு சொந்தமா..."
".............."
" அடுத்த நொடி நாம் உயிரோட இருந்தா அந்த நொடி நமக்கு சொந்தம்"
"................"
" இயற்கை, நம்ம உயிரை நொடியா, நொடியா அடுக்கியிருக்கிறது. இவ்வளவு தான் வாழ்க்கை."
"................"
" என்னடா புருஷா எதுவும் பேச மாட்டேங்குற"
" இப்ப தான் எனக்கு வாழ்க்கை என்னன்னு..."
" கோபத்தை குறைச்சுக்கடா"
" தன்மானம் தாழும்போது கோபத்தை எப்படி...."
" ஒன்னு தெரியுமா கோபப்பட்டா
வாழ்க்கையில வெற்றி அடைய முடியாது"
" அப்ப சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படும் போது கோபப்படாம  இருக்க முடியுமா"
" கோபம் வந்தா அங்கிருந்து கிளம்பிடு, அவ்வளவு தான், இல்லை அமைதியா இருந்திடு"
" உன் கோபம் எடுபடாத இடத்தில நீ ஏன், எதுக்காக,  கோபடனும், நல்லா யோசி..."
" கோபடறதுக்கு கூட தகுதி வேனுமா"
" ஆமாம். அது தான் எதார்த்தம், நடைமுறை"
" புருஷா, இந்த வாழ்க்கையை எதோ ஒரு விதத்துல எல்லோரும் தகுதியை நோக்கி தான் பிராயாணிக்கிறோம்"
" அப்ப உண்மையா இருக்க கூடாதா, நான் நானா இருக்க கூடாதா"
" நீ, நீயா இரு, என்கிட்ட, உன் தாய்கிட்ட, உன் உற்ற நண்பன் கிட்ட, மற்ற இடத்துல நீ பச்சோந்தியா பல சமயத்துல மாறி தான் ஆகனும்"
" அப்ப நம்ம எல்லோரும் பச்சோந்தியா"
" பல சமயத்தில நாம எல்லோரும் பச்சோந்திகள் தான்"
- பாலு.


- பாலு.

எழுதியவர் : பாலு (9-Sep-21, 4:31 pm)
சேர்த்தது : balu
பார்வை : 189

மேலே